பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. உயிரியலும் அணுவும்


யிரியல்[1] துறைக்கு அணுவாற்றல் என்பது புதிதல்ல. மானிடன் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்னரே அண்டக் கதிர்கள்[2] எனப்படும் ஒருவகைக் கதிர்களின் கதிரியக்கக் கிளர்ச்சி வானத்திலிருந்து பூமியைத் தாக்கிக் கொண்டிருந்தது ; ரேடியம் போன்ற கதிரியக்கப் பொருள்கள் தம்முடைய கதிர் வீசலைத் தந்துகொண்டுதான் இருந்தன. வானிலும் பூமியிலுமுள்ள இந்தக் கதிர்வீசல் இன்றும் இவ்வுலகில் எம்மருங்கும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. கதிர்வீசல் கடல்மட்டத்தில் மிகக் குறைவாகவும், மலையுச்சியில் அதிகமாகவும் இருக்கின்றது. மலையுச்சியில் இருக்கும் அளவில் பத்தில் ஒரு பங்குதான் கடல்மட்டத்தில் இருக்கும். காரணம், மலையுச்சியின் மீதுள்ள மெல்லிய காற்று அதிகமான அண்டக் கதிர்களை அனுப்புகின்றன; பூமியிலும் கதிரியக்கப் படிவுகள் உள்ளன.

இன்றைய நில வேறு. இன்றுள்ளதுபோல் கதிரியக்க மூலங்கள் என்றும் அதிகமாக இருந்ததில்லை ; இவ்வளவு அதிகமான அளவிலும் அக் கதிர்வீச்சு ஒருநாளும் விடுவிக்கப்பெறவில்லை. இப்புவியில் ரேடியம் போன்ற பதினாறு


  1. உயிரியல்-biology.
  2. அண்டக் கதிர்கள்- cosmic rays