பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அணுவின் ஆக்கம்



இந்த மூன்று கதிர்களும் இயற்கையின் வழியே எழுகின்றன. ஆதலின், இவற்றின் அளவினைச் செயற்கை முறையில் அடக்கி ஆள முடியாது. இம் மூன்றனையும்பற்றி ஏற்கெனவே ஒரு சிறிது அறிந்து கொண்டுள்ளோம்.

(ஈ) பொது இயல் மின்னிகள் : இவற்றில் மின்னூட்டம் இல்லை. இவை மிக வேகமாகச் சென்று பாய்பவை ; பெருங்கேட்டினையும் விளைவிப்பவை. இவற்றின் வேகத்திற்கேற்ப இவை உயிரிழையங்களைப் பல அடி ஆழம் துளைத்துச் செல்லும்.

(உ) புதிர்க் கதிர்கள் : காமா - கதிர்களைப் போன்றவை. ஆனால், துளைத்துச் செல்லும் ஆற்றலிலோ காமா - கதிர்களுக்குக் குறைந்தவையே.

கதிர்விச்சின் விளைவு: இந்தக் கதிர்களால் நேரிடும் கதிர் வீச்சுக்கள் யாவும் உயிர்ப் பொருள்களை ஒரே மாதிரியாகத்தான் பாதிக்கின்றன. காரணம், எல்லா உயிர்ப் பொருள்களும்13 ஒரே மாதிரியான இயைபுப் பொருள்களைக்14 கொண்டவை. எடுத்துக்காட்டாக, கார்பன் எல்லா உயிர்ப்பொருள்களின் ஓர் இயைபுப்பொருள். கார்பன் அணுவின் அனுக்கருவில் ஆறு அலகு15 நேர்மின்சாரம்16 உள்ளது. இந்த அணுக்கருவினைச்சுற்றி ஆறு எதிர் மின்னிகள்17 கோள் நிலையில் சுழன்று கொண்டிருக்கின்றன : ஒவ்வொரு எதிர் மின்னியும் எதிர் மின்சாரத்தைக்18 கொண்டது. இந்த ஆறு நேர் மின்சார அலகுகளும் ஆறு எதிர் மின்சார அலகுகளும் ஒன்றாக இணைந்துதான் கார்பன் அணுவை மின்சார - சமனிலையாக இருக்கும்படி செய்கின்றன. நீரியம், நைட்ரொஜன், உயிரியம் போன்ற எல்லாத் தனிமங்களின் அணுக்களும் மின்சார - சமனிலையில்தான் உள்ளன. உயிர்ப் பொருள்கள் யாவும் கார்பன், நீரியம், நைட்ரொஜன், உயிரியம் ஆகிய


13உயிர்ப் பொருள்கள்-living things. 14இயைபுப் பொருள்கள்-constituents. 15அலகு-unit. 16நேர்மின்சாரம்- positive electricity. 17எதிர் மின்னி-electron. 18எதிர் மின்சாரம்-negative electricity.