பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிரியலும் அணுவும்

185


டாலும், பெருங்கேடு நிகழ்கின்றது, இதனால் குருதிச் சிவப்பு அணுக்களின் உற்பத்தி தடைப்படுகின்றது. குடல்களோ " இனப்பெருக்க உறுப்புக்களோ " ஊறுபடக் கூடும். கதிரியக்கம், நுரைப்புளியங்கள் " என்று வழங்கப்பெறும் மிகச் சிக்கலான அணுத்திரனேகளின் செயலேயே வேறுபடுத்தக்கூடும் என்பது உறுதி. இந்த நுரைப்புளியங்கள் தாம் நமது உடலினுள் நடைபெறும் செரிமானம், தசை இயக்கத்திற்கு உணவாற்றலைப் பயன்படுத்துதல், இழைய வளர்ச்சி, இழையங்கள் திரும்ப உண்டாதல் போன்ற ஆயிரக்கணக்கான உயிர்-வேதியற் கிரியைகளை ஆட்சி செலுத்துகின்றன; அவை நடைபெறவும் துணைசெய்கின்றன. இவைதாம் உயிர்ப் பிராணிகளின் உடலினுள் நடைபெற்று விரும் இயக்கநிலை மாற்றங்கள் ; உயிர்ப் பொருள்களிடம் உள்ள இரகசியங்கள். இந்த இரகசியங்களைத் துளைத்துப் பார்க்கப் பல ஆண்டுகளாக முயன்றும், அறிவியலால் சாத்தியப்படவில்லை. காரணம், உடலினுள் நடைபெறும் கிரியைகளே எட்டிப் பார்க்கவல்ல கருவிகளும் கிட்டவில்லை; யுக்திமுறைகளும் கண்டறியப் பெறவில்லை. இன்றைய அணுயுகம் இந்நிலையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. உயிர்க்கிரியைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த ஆராய்ச்சிக்குத் தேவையான புதிய, ஆற்றல் வாய்ந்த கருவியையும் அணு யுகம் நமக்கு அளித்துள்ளது. அதுதான் கதிரியக்க ஓரிடத்தான்; உளவுகாட்டும் வழி-துலக்கியாகப் பயன்படுவது. உயிர்ப் பிராணிகள் சாதாரணமாகப் பயன்படுத்தும் தனிமங்களின் கதிரியக்க வடிவங்களேக்கொண்டு இழையங்களேத் துளைத்துச் சென்றும், மிகச் சிக்கலான வேதியல் மாற்றங்களை ஊடுருவிச் சென்றும் பார்க்க முடிகின்றது. கைகர் எண்-கருவிகளைக் கொண்டும் கதிர்களால் பாதிக்கப்


* குடல்கள் - bowels. இனப்பெருக்க உறுப்புக்கள்-reproductive organs. * -நுரைப்புளியம்- enzyme. * இயக்க நிலை மாற்றங்கள்- dynamic changes. * tool -கருவி . * யுக்தி முறை - technique, உளவு காட்டும் வழி-துலக்கி tracer»