பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

187தசையணுக்களைப்போல் இல்லை; அன்றியும், அவை ஆயிரக்கணக்காகவுள்ள பிரத்தியேகமான உயிரணுக்களில் ஒருவகையுடன் கூட ஒத்திருக்கவில்லை. எனினும், இந்த் உயிரணுக்கள் யாவற்றிலும் ஒரேவிதமான அடிப்படைப் பொருள்கள் உள்ளன. அப்பொருள்கள் யாவும் ஒரேவித அடிப்படைக் கோலத்தில்தான்[1]“ அமைந்துள்ளன. கதிச் வீச்சு அவற்றிலுள்ள அணுத்திரள்களை அயனியாக்கி அவற்றைக் கேடுறச் செய்துவிடும்.


உயிரணு ஒரு மெல்லிய சவ்வினால் போர்த்தப் பெற்றிருக்கின்றது. அச்சவ்வினுள் களிபோன்ற உயிர்ப் பசைத்துளி அடங்கிக் கிடக்கின்றது. (படம் 28). இக்களிப் பொருளில் சற்று கனமான உள்ளணு[2]மிதந்து கொண்டிருக்கிறது. நுண்ணணுப் பெருக்கி[3]கண்டறியப்பெற்ற பிறகு கடந்த 300 ஆண்டுகளாக, நாம் உயிரணுக்களைப் பற்றி மிக அதிகமாக அறிந்துள்ளோம். அவை தம்மைத்தாமே பெருக்கிக்


  1. 42 கோலம் - pattern.
  2. 43 உள்ளணு - nucleus
  3. 44 நுண்ணணுப் பெருக்கி - microscope.