பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அணுவின் ஆக்கம்



ஆர்கான் [1] என்ற இடத்திலுள்ள அறிவியலறிஞர்கள் ஒரு சிறிய வெளவாலின் சிறகிலுள்ள குருதியோட்டத்தில் கதிர்வீச்சு உண்டாக்கும் விளைவுகளை ஆராய்ந்தனர். வெளவாலின் சிறகு மெல்லியது; 1/1000 அங்குலம் கனம் உடையது. ஆகவே, ஆய்வாளர்கள் பேராற்றலையுடைய நுண்ணணுப் பெருக்கியின் துணையால் குருதியோட்டத்திலும், நிணநீர் ஓட்டத்திலும் நேரிடும் மாறுதல்களை உற்று நோக்கி அறிய முடியும். வெளவாலைக் கதிர் வீச்சிற்கு உட்படுத்திய பிறகு, அவர்கள் அப்பிராணியின் சிறகில் குருதியோட்டம் மெதுவாக நடைபெறுவதைக் கண்டனர். காரணம், சிதைந்த உயிரணுக்களும் பிற கரிமச் சிதை பொருள்களும் [2] குருதி செல்லும் நுண்புழைகளே [3] அடைத்துக் கொண்டன. அதிகமாகக் கதிர்வீச்சினுக்கு உட்படுத்திய கொடுமையான குருதியொழுக்கினை [4] விளைவித்த பிராணிகளையும் ஆராய்ந்தனர். குருதிக் குழல்களில் உறைதலைத் தடுக்கும் ஹெபாரின் [5] என்ற பொருள் கதிர்வீச்சினால் அதிகரிக்கின்றது என்றும், அதுதான் குருதியொழுக்கினுக்குத்துணை செய்கிறது என்றும் கண்டனர்.

குடிவழியிலும் கேடு : அதிக ஆற்றலுள்ள கதிர் வீச்சு புண்களையும் கதிர்வீச்சு நோயினையும் தருவதுடன் உயிருள்ள பொருள்களை மிக நுட்பமான முறைகளில் பாதிக்கவும் செய்கின்றது; இதனை உடனே கண்டுகொள்ள முடியாது. இக்கதிர்வீச்சு மக்கள், பிராணிகள், தாவரங்கள் ஆகியவற்றிலுள்ள உயிரணுப் பொருளையே பாதித்து ஒரு தலைமுறையிலிருந்து [6] அடுத்த தலைமுறைக்குக்கொண்டு செல்லப்பெறும் பண்புகளையே மாற்றி விடுகின்றது. அறிவியல், மருத்துவ இயல், தொழிலியல், போரியல் போன்ற பல துறைகளிலும் கதிர் வீச்சு பல்வேறு வடிவங்களில் பயன்படும் இக்காலத்தில் அது குடிவழிப் பண்பை எவ்வெவ்வாறெல்லாம் மாற்றக்


  1. 50.ஆர்கான் - Argonne
  2. 51.கரிமச்சிதை பொருள்கள் - organic debris
  3. 52.நுண்புழை – capillary
  4. 53. கொடுமையான குருதி யொழுக்கு-acute hemorrhage
  5. 54. ஹெபாரின் - heparin
  6. 55. தலைமுறை-generation.