பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

195


உயிர் மின்னியும் உடல் வளர்ச்சிக்கு அல்லது அதன் செயலாற்றலுக்கு ஒரு பிரத்தியேகமான தொழிலைப் புரிகின்றது என்று உயிரியல் நிபுணர்கள் கருதுகின்றனர். குழந்தைகளிடம் அவை புரியும் விளைவுகளைக் கண்டு அவற்றை ஆராய்ந்து இனங் காண்கின்றனர். எடுத்துக்காட்டு : மனிதனின் உரோமம், தோல், கண்கள் ஆகியவற்றின் நிறங்கள் மெலானின்[1] என்ற நிறமிகளால் [2] உண்டாகின்றன. பெற்ரறோர்கள் இருவரிடமுமுள்ள ஆயிரக்கணக்கான உயிரணுக்களில் ஏதாவதொன்று மெலானினை உண்டாக்குவதற்குச் சாதகமின்றியிருந்தால், குழந்தையின் உடலில் மெலானின் உற்பத்தியாகாது. பிறப்பிலிருந்தே அக்குழந்தை ஆல்பினோவாக[3] இருக்கும்; அஃதாவது, அதன் கண் இளஞ் சிவப்பாகவும், இலேசான தோலுடனும், வெண்ணிற மயிருடனும் இருக்கும்.

இரு பெற்றோர்களிடமுமுள்ள இன்னொரு உயிர் மின்னி சரியானபடி குருதியுறைதலுக்குச் சாதகமற்றதாக இருந்தால், குழந்தையின் குருதி சாதாரணமாக உறையாது. அக்குழந்தை “குருதிச் சொரிபவனாக” இருக்கும்; அஃதாவது, ஹெமோபிலியா என்ற நோய் அக்குழந்தை குடிவழியாகப் பெற்றிருக்கும்.

ஆல்பினஸமும் ஹெமாபீலியாவும் பின் தங்கி நிற்கும் பண்புகள்[4]. அஃதாவது, ஒரு பெற்றோர் ஆல்பினிஸம் உண்டாக்கக்கூடிய ஒர் உயிர் மின்னியை அக்குழந்தைக்குக் கொடுத்தால், மற்றொரு பெற்றோர் சாதாரணமாக ஒரு மெலானின் உயிர் மின்னியைத் தருவார். இப்பொழுது அக்குழந்தை ஒரு ஆல்பினோவாக இருக்காது சாதாரண நிலையில்தானிருக்கும். ஆல்பினோ பண்பை குடி வழியாகப் பெறவேண்டுமானால், ஆல்பினோவை உண்டாக்கும் உயிர் மின்னிகளைக் குழந்தை தன் பெற்றோர் இருவரிடமிருத்தும் பெறுதல் வேண்டும். அச் சந்தர்ப்பங்களில் உயிர் மின்னி-


  1. 72. மெலானின்- melanin.
  2. 73. நிறமி – pigment.
  3. 74. ஆல்பினோ- albino.
  4. 75. பின்தாங்கி நிற்கும் பண்புகள்-recessive traits.