பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

அணுவின் ஆக்கம்


யின் சாதாரண வடிவம் ஓங்கி நிற்கும் பண்பைப்[1] பெற்றிருக்கும்.

குடிவழியாக வரும் ஒரு சில முறை பிறழ்ச்சிகளும்[2] உள்ளன. இவற்றில் ஓங்கி நிற்கும் பண்புகள் காணப்படும். எடுத்துக்காட்டு : அரிவாள் - உயிரணு குருதிச் சோகை[3] இதில் சிவப்பு உயிரணுக்கள் அளவுக்கு மீறி அதிகமாக இருக்கும்; இவை சுருங்கிய வாழ்நாளுள்ளவை. ஏதாவது ஒரு பெற்றோரிடமிருந்து வரும் ஓர் உயிர் மின்னி சாதகமாற்ற பண்பைக் கொண்டிருந்தால் இந்நோய் தோன்றும்.

சடுதி மாற்றங்கள்[4] உயிருள்ள பொருள்களில் உயிரணுக்கள் இரண்டு இரண்டாகப் பிரியும்பொழுது உயிர் மின்னிகள் சாதாரணமாக இரட்டிப்பது ஆச்சரியமான செயலாகும். சாதாரணமாக நடைபெறுவதற்கு மாறாக நடப்பது பல இலட்சத்தில் ஒன்றாகும். அத்தகைய மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவை சடுதி மாற்றங்கள் என வழங்கப் பெறுகின்றன. இவற்றுள் சாதகமானவைகளும், சாதகமற்றவைகளும் உள்ளன.

இனத்தின் மொத்த எண்ணிக்கையையோ, தனிப்பட்டவற்றின் வீரியத்தையோ[5] குறைக்கக் கூடியவை சாதகமற்ற மாற்றங்கள். சாதகமான மாற்றத்தில் தனிப்பட்டவை சூழ்நிலையை நல்ல முறையில் அனுசரித்துக்கொள்ளும் நிலைமை ஏற்படுகின்றது. சாதகமான மாற்றங்கள் நடைபெறுவது அருமை; அவை நடைபெறத்தான் செய்கின்றன. அவை தாம் கூர்தல் அறத்தின் அடிப்படை என்று நம்பப்படுகிறது.

ஒரு சிக்கலான இயந்திரத்தில் ஏதாவது ஒரு சிறு மாற்றத்தைச் செய்தாலும் இயந்திரத்திற்குக் கேடு விளைவிப்பது போல அடிக்கடி சடுதி மாற்றம் அடையும் உயிர் மின்னிகளால் உயிரிக்கு சாதகமற்ற விளைவுகள் நேரிடு-


  1. 76. ஓங்கி நிற்கும் பண்பு - dominant trait.
  2. 77. முறை பிறழ்ச்சிகள்-abnormalities.
  3. 78. அரிவாள் - உயிரணு குருதிச் சோகை - sickle - cell anaemia.
  4. 79. சடுதி மாற்றங்கள் - mutations.
  5. 80. வீரியம் - vigour