பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

199


பவை உடலுக்குத் தேவையான மற்றொருவகைப் பொருள்கள் ; இவை இன்றியமையாத எரியைகளாகப் பயன்படுகின்றன. இவை எரிந்து ஆற்றலை உண்டாக்குகின்றன ; இவ்வாற்றல் உயிர் வாழ்வதற்கு அவசியம். அன்றியும், அப்பொருள்கள் உடல் அமைப்பிற்கும் தேவைப்படுகின்றன. லிபிட்டுகள்[1] என்பவை பிறிதொருவகைப் பொருள்கள் ; இவை கொழுப்பும் கொழுப்புபோன்ற பொருள்களுமாம். இவையும் ஆற்றல் மூலமாக இருப்பதுடன், புத்துயிர் பெறவும் பயன்படுகின்றன ; இன்னும் இவை ஹார்மோன்களின் இயைபுப் பொருளாகவும் உள்ளன. நியூக்ளிக் அமிலங்கள்[2] என்பவையும் உடலின் கட்டடச் செங்கல்களே. அவற்றின் அமைப்பு இன்னும் தெளிவாக அறியக் கூடவில்லை ; அவை இன்னவை என்று வரையறுக்கப் பெறவும் இல்லை. ஆயினும், அவை பிசிதத்துடன் சார்புபடுத்தப் பெற்றுள்ளன. இந்த அமிலங்கள் நியூக்ளியோ பிசிதங்கள் எனப்படும் மிகப் பெரிய அணுத்திரளைகளைக் கொண்டவை. இந்த நியூக்ளியோ பிசிதங்கள்[3] தாம் உயிரணுக்களின் உள்ளணுக்களாம். இவற்றைத் தவிர, வேறு முக்கிய பொருள்களும் உள, அவை பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்றவையடங்கிய மின்னாற்பகு திரவங்களும் பல்வேறு குருதியின் இயைபுப் பொருள்களுமாகும்

.

இப்பொருள்களின் பண்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் அவை என்ன என்பதைத் திட்டமாக வரையறுக்கப் பெறல் வேண்டும். நோய்களும் கதிரியக்கமும் அப்பொருள்கள் சிலவற்றைச் சிதையச் செய்கின்றன : சிலவற்றை வேறு பொருள்களாக மாற்றுகின்றன ; இன்னும் சிலவற்றை இயங்கா நிலைக்குக் கொண்டுவந்து விடுகின்றன. எனவே, லிபிட்டுகள், பிசிதங்கள், நியூக்ளிக் அமிலங்கள், மின்னாற்பகு திரவங்கள், நுரைப்புளியங்கள், ஹார்மோன்கள் ஆகியவற்றின் அடிப்படை அமைப்பையும் செயல்களையும் திட்டமாக வரையறுத்தாலன்றி அவற்றிற்குநேரும் ஊறுகளை


  1. 86. லிபிட் - lipid.
  2. 87. நியூக்ளிக் அமிலம் - nucleic acid
  3. 88. நியூக்ளியோ பிசிதங்கள் - nucleo proteins.