பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

அணுவின் ஆக்கம்


அறிந்துகொள்ளுதல் இயலாது. வழி-துலக்கி ஆராய்ச்சி இதற்குப் பெருந்துணைபுரிகின்றது.

மேற்கூறிய பிரச்சினைகளை அறிவதற்குக் குருதி ஆராய்ச்சி பயன்படுகின்றது. குருதியில் பிளாஸ்மா, உயிரணுக்கள் அடங்கியுள்ளன. குருதிதான் வேதியற்பொருள்களையும் உயிரியத்தையும் உடலெங்கும் கொண்டு செல்லும் சாதனம். குருதி எளிதாகப் பெறக்கூடிய பொருளாதலால் அது ஆராய்ச்சிப் பொருளாகவும் பயன்படுகின்றது. அயச்சத்தும் துத்ததாகச் சத்தும் குருதியிலுள்ள வெள்ளையணுக்கள், சிவப்பு அணுக்கள் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தில்[1] பங்குகொள்ளுகின்றன. இந்த இலவலேச உலோகங்களின்[2] செயலைக்கண்டறிந்து குருதிச்சோகை, லூக்கேமியா[3] என்ற நோய்களைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. கதிரியக்க அயமும் கதிரியக்கத் துத்தநாகமும் இதற்குப் பெரிதும் பயன்படுகின்றன. கதிரியக்க அயம் செலுத்தப்பெற்ற உடலிலிருந்து குருதியை எடுத்து ஆராய்ந்தனர். அயச்சத்தின் ஒரு சிறிய பகுதியையே உடல் நாள்தோறும் இழந்துவருகிறது என்றும், குருதியிலுள்ள சிவப்பு அணுக்களின் சிதைவினால் 90 அல்லது 95 சதவிகிதம் அயச்சத்து கழிவுப் பொருள்களாக உடலிலேயே தங்கி மீண்டும் அவை புதிய சிவப்பு அணுக்களாகப் பயன்படுகின்றன என்றும் அறிந்தனர். (படம்-31). எனவே, அடிக்கடி குருதியை வழங்கும் குருதிக் கொடையாளிகள் உடலில் அயச்சத்து குறையாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இன்னும், எலும்பு மச்சையிலுள்ள சிவப்பு அணுக்கள் சிலநாட்கள் வரையிலும் அயச்சத்தை ஏற்றுக்கொள்ளுகின்றன என்றும், நன்றாகப் பக்குவமடைந்த சிவப்பு அணுக்கள் அதனை ஏற்பதில்லை என்றும் சோதனைகளால் கண்டறிந்துள்ளனர். இவ்வாறே கதிரியக்கத் துத்தநாகத்தை உடலில் செலுத்தி லூக்கேமியா என்ற நோயின் தன்மையை அறிந் தனர். லூக்கேமியா நோயால் பீடிக்கப்பெற்ற வெள்ளேயணுக்களில் துத்தநாகச் சத்து குறைவாக இருக்கின்றது.


  1. 89.வளர்சிதைமாற்றம் - metabolism.
  2. 90. இலவலேச உலோகங்கள் - trace metals.
  3. 91. லூக்கேமியா - leukamia