பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. மருத்துவத்துறையில் அணு



வரலாற்று அறிவு : வரலாற்றை எவன் ஒருவன் உதாசீனம் செய்கின்றானோ அவன் திரும்பவும் அவ்வரலாற்றுப் பாதையில் செல்லவேண்டியவனாகின்றான் என்று ஒரு தத்துவ அறிஞர் கூறியுள்ளார். அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புக்களின் வரலாற்றில் இதனை விளக்கப் பல படிப்பினைகள்[1] உள்ளன. வரலாற்றறிவே இல்லாதிருந்தால் சில கண்டுபிடிப்புக்களில் மனிதன் செய்துபிசகி-அறிமுறைகளில்[2] பெற்ற அனுபவங்களையும் தொல்லைகளையும் மீண்டும் பெற வேண்டியவனாகின்றான். பிற கண்டுபிடிப்புக்களைப் பற்றிய வரலாற்றறிவு நன்கு பெற்றிருந்தால் முன்னோர் அனுபவித்த தொல்லைகளை யெல்லாம் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈடுபடுவோர் அனுபவிக்க வேண்டியதில்லை. புதிய கண்டுபிடிப்புக்களுக்குக் கொண்டுசெலுத்தும் எந்தச் செயலிலும் ஆபத்து நேரிடக்கூடும் என்ற உண்மையை எளிதாகப் புறக்கணிக்க முடியாது. ஆராய்ச்சியில் செய்யப் பெறும் சோதனைகளால் புதிய பொருள்கள் உண்டாக்கப் பெறுதல் கூடும் ; அல்லது, தீவிரமான விளைவுகளை உண்-


  1. படிப்பினைகள் - lessons
  2. செய்து-பிசகி-அறிமுறை - trial-and-error method