பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருத்துவத்துறையில் அணு


இன்னனொரு அனுபவம்: அறிவியல் துறையில் இன்னொரு அனுபவமும் உண்டு. ஒரு பொருள் புதிதாகக் கண்டறியப் பெற்றதிலிருந்து அது வாழ்க்கையில் பயன்படுவதற்கு நீண்ட காலம் ஆகிறது. சில சமயம் நூற்றாண்டுகளும் கழிகின்றன. எடுத்துக்காட்டாக சல்பூரிக் ஈதர்[1] என்ற திரவப் பொருள் வேலரியஸ் கார்டஸ்[2] என்பவரால் 1540-ல் முதன் முதலாகக் கண்டறியப்பெற்றது. சுமார் 300 ஆண்டுகட்குமேல் சாதாரணமான ஒரு வேதியற் பொருளாகவே அது பயனற்றுக்கிடந்தது. அது விபத்துக்களை விளைவிக்கக் கூடியவாறு எளிதில் தீப்பற்றக் கூடியது ; பள்ளி மாணாக்கர்கள் மட்டிலும் விளையாட்டாக அதனைப் போதை தரும் பொருளாகப்[3] பயன்படுத்தி வந்தனர். கிராபோர்ட் லாங்[4] என்பாரும் டபிள்யூ. டி. ஜி. மார்ட்டன்[5] என்பாரும் 1842-44-ஆம் ஆண்டுகளில் அது மருத்துவத் துறையில் வியத்தகு மயக்க மருந்தாகப் பயன்படுவதை அறிந்தனர். அந்தோ ! பரிதாபம்! ஈதரை மனித நலனுக்குப் பயன்படுத்தும் முறைகளை ஆராய்ந்து கண்டறியாததால் அனாவசியமாக விளைந்த மொத்த வலியைக் கணக்கிட்டுப் பாருங்கள். 300 ஆண்டு காலமாக எத்தனைபேர் எவ்வளவு வலியையும் தொல்லைகளையும் அனுபவித்து வந்தனர்!

ராண்ட்ஜன் என்பார் கி. பி. 1895-ல் புதிர்க்கதிர்களைக் கண்டறிந்தார். வெகு விரைவில் அக்கண்டுபிடிப்பு மனித நலனுக்குப் பயன்பட்டது. எலும்பு முறிவின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளவும், முறிந்த எலும்புகளைத் தக்க முறையில் பொருத்தவும் அது பயன்படுத்தப்பட்டது. 1902-ல் கானான்[6] என்பார் சோதனைப் பிராணிகளை[7] பேரியம் விழுங்கச் செய்து அதன்பிறகு புகைப்படங்களை எடுத்தார். அவற்றை


  1. 8. சல்பூரிக் ஈதர் - sulphuric ether.
  2. 9. வேலரியஸ் கார்டஸ் - Valerius Cordus.
  3. 10. போதை தரும் பொருள் - intoxicant.
  4. 11. கிராபோர்ட் லாங் - Crawford Long.
  5. 12. டபிள்யூ. டி. ஜி. மார்ட்டன் -W. T. G. Morton.
  6. 13. கானான் - Cannon
  7. 14. சோதனைப்பிராணிகள் - experimental animals.