பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

அணுவின் ஆக்கம்


ஆராய்ந்து தீவிர உணர்ச்சிகளால் இரைப்பையிலும்[1] குடல்களிலும்[2] நேரிடும் விளைவுகளை திட்டப்படுத்தி யுரைத்தார். இவ்வாறு அவர் நீண்ட நாட்களாக பெளதிகத் துறை எதிர்பார்த்திருந்த உள-உடல் மருந்துக்களைக்[3] கண்டறிவதில் அடிப்படைகளில் ஒன்றினை நிறுவினார். இன்னும் சில ஆண்டுகளில் வன்மைப் புதிர்க்கதிர்களைப்[4] பிளவை[5]களிலும் மென்மைப் புதிர்க் கதிர்களை[6] சருமத்திலும் உரோமத்திலும் பயன்படுத்தும் முறைகள் கண்டறியப் பெற்றன. ராண்ட்ஜனோ அவர் காலத்திருந்த பிற அறிவியலறிஞர்களோ கனவிலும் காணாத புதுமைகள் பிற்காலத்தில் புலனாயின. இவ்வாறு ஒரு புதிய பொருளின் பயன்கள் வித்தினுள் புறத்தே புலனாகாது உறங்கிக் கிடக்கும் நுண்ணிய தாவரங்கள்போல் அடங்கிக்கிடந்தாலும்,அவை எதிர்காலத்தில் நிறைந்த பலனை அளிக்கக்கூடும். வித்திலுறையும் செடிகளைப்பற்றி முன்னதாக ஒன்றும் கூற இயலாவிடினும், அது எதிர் காலத்தில் பெரிய மரமாக மாறுவது உறுதி என்பதை எவரும் அறிவர். அதுபோலவே புதிய கண்டுபிடிப்புக்களின் விளைவாக வெளிப்பட்டபொருள்கள் நிறைந்த பலனை அளிக்கும் என்பது உறுதி. மனித நலனுக்கும் பயன்படுத்தும் முறையில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினால் இப்பயன் விரைவில் கிட்டக்கூடும். பண்படாப் பெட்ரோலியத்திலிருந்து[7] மண்ணெண்ணெயை[8] வடித்தெடுத்தலில் உடன்விளைவுப் பொருளாகக் கிடைத்த கேஸோலினின் கதையும் இப்படித்தான். முதலில் விலை மதிப்பற்றதாகவும் விபத்துக்களை விளைவிக்கும் பொருள் என்றும் கருதப்பெற்ற கேஸோலின்[9] என்ஜின்களில் பயன்படுத்தப்பெற்றவுடன் தன் ஒப்பற்ற உபயோகத்தை வெளிப்படுத்தியது. இதுதான் உள்ளெரி பொறிகளின்[10] வளர்ச்சிக்கு வழிகாட்டியது. இன்று உள்-.


  1. 15. இரைப்பை -stomach.
  2. 16. குடல்கள் - intestines.
  3. 17. உள உடல் மருந்துகள் - psychosomatic medicines.
  4. 18. வன்மைப் புதிர்க் கதிர்கள் -hard x-rays.
  5. 19. பிளவை - tumour.
  6. 20. மென்மைப் புதிர்க்கதிர்கள்-soft x-rays.
  7. 21. பண்படாப் பெட்ரோலியம் - crude petroleum.
  8. 22. மண்ணெண்ணெய் - kerosene.
  9. 23. கேஸோலின் - gasoline.
  10. 24. உள்ளெரி பொறி - internal compustion engine.