பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணுவின் அற்புத ஆற்றல்

7


 செயல் ; அசாதாரணமான செயலுங்கூட. போர்க்காலங்களில் அழிவு வேலைக்கு மட்டிலும்தான் இச்செயல் பயன்படுகிறது. தீவிரம் குறைந்த வெடிமருந்துக்கள்13 கற்களைச் சல்லிகளாக உடைப்பதற்கும், குடைவழிகளை14 அகழ்வதற்கும், நீர்வழியே கப்பல்கள் செல்லுவதற்கேற்ற நீரடிப் பாதைகளை அமைத்துத் தருவதற்கும் பயன்படுகின்றன. எங்கெல்லாம் கடினமான பாறைகள் உடைக்கப்பெற நேரிடுகின்றதோ அங்கெல்லாம் இறுகித் தேங்கிக் கிடக்கும் ஆற்றல் பயன்படுகிறது என்பது நமக்குத் தெரியும். அமைதிக் காலத்தில் வெடிமருந்துக்கள் இவ்வாறு பயன்படுகின்றன. எனினும், சாதாரணமாக அன்றாட வாழ்வில், இறுக்கமான ஆற்றலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. அங்ஙனமே, விரைவாக ஆற்றலை வெளிப்படுத்தும் முறையும் அதிகமாகப் பயன்படுவதில்லை. அடுப்பிலுள்ள தீ பல மணிநேரம் எரிந்து உண்டிவகைகளை ஆக்க உதவுகின்றது ; கருமான் உலைக் களத்திலுள்ள தீ உழவர்களின் கருவிகளை ஆயத்தம் செய்ய உதவுகின்றது. உள்ளெரி பொறியினைக்15 கொண்ட தானோடியில்16 எரியையிலிருந்து17 வெளிப்படும் ஆற்றல் விரைவாகவோ மெதுவாகவோ அப்பொறியைக் கொண்ட ஊர்தியின் சக்கரங்களை அடைகின்றன ; இவ்வாறு அடைவது வண்டியோட்டியின் அவசரத்திற் கேற்றவாறும், போக்குவரவுகளின் நெருக்கடிக் கேற்றவாறும் மாறுதல் அடையக் கூடும். இங்ஙனம் வெளிப்படும் ஆற்றல் வினாடி அளவுகளில் வெளிப்படுவதன்று ; அது நிமிடக்கணக்கில், மணிக் கணக்கில்தான் வெளிப்படுகிறது. அது அமைதியான அன்றாட வாழ்வில் மிகச் சிறிய அளவுகளில் மெதுவாகத்தான் பயன்படுகின்றது. அந்த ஆற்றல், எரியைகளிலிருந்து கிடைக்கின்றதேயன்றி வெடி மருந்துக்களினின்றும் கிடைப்பது அன்று. போருக்கும் அமைதிக்கும் இதுதான் மாபெரும் வேற்றுமை.


13 வெடிமருந்துகள் - explosives. 14 குடைவழி - tunnel. 15 நீரடிப்பாதைகள் - under water channels. 16 உள்ளெரி பொறி - internal combustion engine. 17 தானோடி – automobile. 18 எரியை - fuel,