பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருத்துவத்துறையில் அணு

215


செறிந்து திரளுகின்றன. அவை வீசும் பீட்டா - கதிர்கள் புரிசைச் சுரப்பியிலுள்ள சில இழையங்களை அழிக்கின்றன. அயோடினைப் பெற்ற மனிதனின் புரிசைச்சுரப்பி மட்டுக்கு மிஞ்சிய சுறுசுறுப்பு[1] உடையதாக இருக்கலாம். அதனை ஹைப்பர்-தைராய்டிஸம்[2] என்று வழங்குவர். அந்நிலையில் தொண்டைப்புறம் வீங்கி கண்டத்தில் பெரிய கழலை உள்ளதுபோல் தோன்றும். கதிரியக்க அயோடின் வீசும் கதிர்களால் சில இழையங்கள் அழிவுற்றபிறகு அந்தச்சுரப்பியின் சுறுசுறுப்புக் குறைந்து சாதாரண நிலைக்கு வருகின்றது. தன் வேலை முடிந்ததும், கதிரியக்க அயோடின் பல்லைப் பிடுங்கின பாம்பைப்போல் தீங்குசெய்ய இயலாத நிலயை அடைந்துவிடுகின்றது. பிணி நீங்கின நோயாளியும் உடல் நலத்துடன் என்றும்போலவே வாழ்ந்துவருகின்றான். இன்று கதிரியக்க அயோடின் வாய்வழியேபானமாகவும் கொடுக்கப் பெறுகின்றது. இம்முறையில் அளிக்கப்பெற்ற சிகிச்சை 80 சதவீதமாக உள்ள நோயாளிகளுக்கு மிகவும் திருப்தியளிக்கக்கூடிய முறையில் இருந்தது என்று 1948ல் மேயோ மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தைச்[3] சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். புரிசைச் சுரப்பியில் தோன்றும் புற்று நோயைக் குணப்படுத்தக் கதிரியக்கச் சோடியம் ஓரளவு பயன்படுகின்றது. இவ்வுறுப்பில் தோன்றும் ஏனைய கோளாறுகளின் உண்மைகளைக் காணவும் இப்பொருள் பயன்படுகின்றது. மார்பில் ஏற்படும் அஞ்சினா பெக்டோரிஸ்[4] என்ற மிக்க வலிதரும் இதய நோயினால் உண்டாகும் தாங்கமுடியாத வலியைத் தணிப்பதற்கும் மாரடைப்பு நோயினைக் குணப்படுத்தவும் கதிரியக்க அயோடின் ஓரிடத்தான் பயன்படுத்தப் பெறுகின்றது. சிலவகையான புற்றுநோய்களில் கழலைகளைப் போக்கவும், உடம்பின் குழிகளில் அதிக திரவம் தங்கும் நோயினால் துன்புறுவோர்களின் வலியைக் குறைக்கவும் கதிரியக்கப் பொன் பயன்படு-


  1. 49. மட்டுக்குமிஞ்சிய சுறுசுறுப்புடைய - overactive.
  2. 50. ஹைப்பர் தைராய்டிஸம் - hyper thyrodism.
  3. 60. மேயோ மருத்துவ ஆராய்ச்சி நிலையம் - Mayo cinic.
  4. 61. அஞ்சினா பெக்டோரிஸ் - angina pectoris.