பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

அணுவின் ஆக்கம்


மட்டுக்கு மிஞ்சிய வெள்ளையணுக்கள்10 உண்டானால் இந்நோய் தோன்றுகின்றது. இந்நோய் ஏற்படுவதற்குக் காரணம் தெரியவில்லை. தக்க முறையில் சிகிச்சை செய்து கொண்டே வந்தால் நோயாளிகள் சாதாரணமாகப் புல ஆண்டுகள் செளகர்யமாக வாழலாம்; ஆயினும், இறுதியில் இந்நோய் இறப்பில்தான் கொண்டு செலுத்துகிறது. இந் நோயின் பல்வேறு வடிவங்கள் ஆண், பெண் ஆகிய இரு பாலாரிடையேயும் எல்லா ஆண்டுப் பருவங்களிலும் உண்டாகின்றன; என்றாலும், பெரும்பாலும் 35 - 55 ஆண்டுப் பருவங்களில்தான் அவை அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நோயைப் போக்குவதற்குக் கதிரியக்கப் பாஸ்வரத்தைக் கையாண்டதில் மருத்துவ நிபுணர்கள் இதுவரை வெற்றியையே கண்டு வந்துள்ளனர். எதிர்காலத்தில் இந்தச் சிகிச்சை சிறந்த முறையில் பயன்படக் கூடியதாக வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை ஆராய்ச்சி நிபுணர்களிடையே தோன்றி வருகின்றது. அமெரிக்க நாட்டில் இத்துறையில் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. லூக்கீமி யாவைக் குணப்படுத்தும் சிறந்ததொரு முறையை எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற திடமான நம்பிக்கையுடன் பலர் உழைத்து வருகின்றனர்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.

என்ற பொய்யாமொழி ஒருநாளும் பொய்த்துப் போகா தன்ரறோ ?

சத்திர சிகிச்சை : அழுகு புண் என்பது சத்திர சிகிச்சை மருத்துவர் அடிக்கடிக் காணும் ஒரு நோய்; இந்நோய் குருதியோட்டக் குறைவால் ஏற்படலாம்; இது ஏற்படுவதற்குப் பிற காரணங்களும் உள. இந்தப் புண் ஏற்பட்டால் அழுகிப்போன பகுதியை உடலிலிருந்து வெட்டியெறிவது அவசியம். ஆனால் மிகச் சிறந்த சத்திர சிகிச்சை நிபுணர் கூட எந்த இடத்தில் வெட்டுவது என்பதை மிகத் துல்லியமாக நிர்ணயிப்பது சிரமம். இதை நிர்ணயிப்பதற்குக்


10வெள்ளையணுக்கள் - white corpuscles.