பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

அணுவின் ஆக்கம்


குறைவானது. எனவே, இந்த முறைச் சிகிச்சை சிறந்ததாக அமைகிறது. (படம்-35). முதன்முதலில் சிகிச்சை தரப்பெற்ற பதின்மரில் எண்மரிடம் நல்ல குணத்தைக் கண்டனர். இவ்வித சிகிச்சை இன்னும் குழவிப் பருவத்தில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

படம் 35

1. ஊசி மூலம் குருதியோட்டத்தில் போரான் கரைசல் குத்திப் புகுத்தப் பெறுகின்றது. -

2. பிளவையில் போரான் அணுக்கள் செறிந்து திரளுகின்றன.

3. அணு உலையினின்று வரும் பொது இயல் மின்னிகள் போரான் அணுக்களைத் தாக்க, அதனால் கதிரியக்க அணுக்கள் உண்டாகி பிளவையைத் தாக்குகின்றன.

ஹார்வார்டு மருத்துவப் பள்ளியிலும் மஸாச்சுசெட்ஸ் மருத்துவ நிலையத்திலும் மண்டையோட்டினத் திறக்காமலேயே மூளையிலுள்ள கழலைகளைக் கண்டறிய “பாஸிட்ரான் ஸ்கானர்”69 என்ற கருவி பயன்படுகிறது. ஒரு நோயாளி


69பாஸிட்ரான் ஸ்கானர் - positron scaner.