பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

அணுவின் ஆக்கம்


பயன்படுத்தப் பெற்றது. பிலடெல்பியாவிலுள்ள இத்தகைய இயந்திரத்தினின்று வெளிப்படும் அணுக்கதிர்கள் ஐந்து கோடி டாலர் மதிப்புள்ள ரேடியத்திலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்களுக்குச் சமமாகும். மருத்துவ ஆராய்ச்சிக்காக இவ்வளவு ரேடியம் பயன்பட்டதே இல்லை. ஆனால், இந்தக் கோபால்ட்டு இயந்திரத்தின் அடக்க விலை 75 ஆயிரம் டாலரே. மனிதன் அணுக்களைப் பிளக்கத் தெரிந்து கொண்டதன் பயனாகத்தான் இத்தகைய இயந்திரங்கள் அமைக்கச் சாத்தியமாகியுள்ளது.

உளவு காட்டும் வழி-துலக்கிகள் : நோய்களின் சிகிச்சையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் எவ்வெவ்வாறு பயன்படுகின்றன என்பதை மேலே கண்டோம். இன்னும் எடுத்துக் காட்டுக்களைப் பெருக்கிக் கொண்டே போகலாம். ஓரிடத்தான்களின் வரலாற்றில் இது ஒரு சிறு பகுதியேயாகும். இவ்வரலாற்றை மேலும் தொடர்ந்து அறிய வேண்டுமானால் கதிரியக்கத் துகள்கள் மருத்துவ ஆராய்ச்சியில் எப்படியெல்லாம் பயன்படுத்தப் பெறுகின்றன என்பதைக் கூற வேண்டும். ஒரிடத்தானிடம் துப்பறியும் பண்புகள் 75 அமைந்து கிடக்கின்றன. இத்திறமைகள் அவற்றை உளவு காட்டும் வழி-துலக்கிகளாகப் 76 பயன்படுத்துவதற்கு உதவுகின்றன. வழி-துலக்கி என்றால் என்ன ? அவ்வாறு வழங்கப் பெறுவதற்குக் காரணம் என்ன ? கதிரியக்க ஒரிடத்தான்கள் தாம் சென்ற வழியைக் கதிர்ப் பொழிவுகளால் கைகர் எண்-கருவியின் மூலமாகத் துலக்கிக் காட்டுவதால் அவை இப்பெயர் பெற்றன. இவை செல்லும் வழியில் எண்-கருவியை வைத்தால் அது 'கிளிக்' என்று ஒலிக்கின்றது ; ஓரிடத்தான்கள் சென்றுள்ள வழிகளையெல்லாம் புலப்படுத்துகின்றது. கதிரியக்க ஓரிடத்தான்களை மணி கட்டிய ஆடுகள் என்று சொல்லலாம். ஓர் ஆட்டின் கழுத்தில் கட்டிய மணி ஒலிப்பதிலிருந்து ஆடு மேய்ப்பவன் தன் மந்தையின் இருப்பிடத்தை அறிய முடிகின்றது. கதிரி


75 துப்பறியும் பண்புகள் - detective qualites. 

76 உளவுகாட்டும் வழி-துலக்கிகள் - tracers.