பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவத்துறையில் அணு 忍忍9

முன்னேற்ற வழிகளும் கண்டறியப் பெற்றுள்ளன. மருத்துவ நிபுணர்கள் குருதிச் சிவப்பு அணுக்களில் குறியிட்ட அணுக்களைப் புகுத்தி அவை உடலில் எவ்வாறு உற்பத்தி யாகின்றன, நிலக்கின்றன, அழிகின்றன என்ற விவரங்களே ஆராய்ந்து வருகின்றனர். இதிலிருந்து பலவகை சோகை ' நோய்களைப்பற்றி அறிகின்றனர். கதிரியக்க ஓரிடத்தான் களின் துணையால் நோயாளியின் உடலில் அபாயமின்றி குருதிப் புகுத்தும் முறைகளும், குருதிக்குப் பதிலாகப் பயன் படுத்தத் தக்க திரவங்களும் கண்டறியப் பெறுகின்றன. இந்த ஒரு துறையில் மட்டிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப் பெற்றுள்ளன ; இதனுல் கோடிக் கணக்கான டாலர்கள் மிஞ்சியுள்ளன.

முடிவு : நோய்களேத் தீர்ப்பதற்கு கதிரியக்கப் பொருள் களைப் பயன்படுத்தும் முறைகள் பல்கிப் பெருகிக்கொண்டு வருகின்றன. இப் பொருள்களின் விலையும் மலிவாகிக் கொண்டு வருகின்றது. பாலுண்ணிகளே அழிப்பதிலும், எச்சில் தழும்பு போன்ற தோல்பற்றிய நோய்களைக் குணப் படுத்துவதிலும் இப்பொருள்கள் பெரிதும் பயன்படுகின்றன. சிறிதுநேரமே நீடித்து நிற்கக்கூடிய கதிரியக்கக் கிளர்ச்சிப் பொருள்களைப் பிளாஸ்திரியாக ஒட்டவோ தடவும் மருந்தாக வைத்துக் கட்டவோ செய்யலாம். இதனுல் யாதொரு தீங் கும் நேரிடாது ; நன்மையே பயக்கும் நற்பொருள்களாகவும் அமையும். இங்ங்னம் கதிரியக்க ஒரிடத்தான்கள் மருத்து வத்துறையில் பெரும் புரட்சி செய்திருக்கின்றன ; இன்னும் எதிர்காலத்தில் எண்ணற்ற நற்பயன்களே விளைவிக்கக் காத்திருக்கின்றன.

    • Garrsos – anaemia.