பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

அணுவின் ஆக்கம்


சத்துப் பொருள்கள்[1] தாவரங்களுக்கு மண்ணின் மூலமும் அங்கிருந்து வேர்களுக்கும் அவற்றிலிருந்து தாவரங்களுக்கும் எந்த அளவில் செல்லுகின்றன, எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றன என்பதை வழி-துலக்கி அறியப்பயன்படுகின்றன. இன்னும் இவ்வோரிடத்தான்கள் அறிவியலறிஞர்களுக்குத் தாவரங்களின் வளர்ச்சிப் பருவங்களில் எப்பருவத்தில் உரம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்று தீர்மானிக்கவும், தாவரங்களுக்கு முழு நன்மை பயக்க வேண்டுமானால் உரத்தை எங்கு, எவ்வாறு இட வேண்டும் என்றும், நாட்டின் பல் வேறுபட்ட மண்ணிற்கேற்றவாறு எந்தவகை உரங்கள் சிறந்த நன்மை பயக்கின்றன என்பதை நிலைநிறுத்தவும், இன்னும் உரமிடுதலில் இன்னோரன்ன நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்மானிக்கவும் துணைசெய்கின்றன.

பயிர்த் தொழிலுக்கென்றே கலவைச் செயற்கை உரங்கள் இன்று ஏராளமாக இயற்றப்பெற்று வருகின்றன. சில செயற்கை உரங்களின் விலை அதிகமாக இருக்கின்றது. இவற்றின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாமா என்று பயிர்த் தொழில் அறிவியலறிஞர்கள் தெரிந்து கொள்ள விழைந்தனர். பயிர் வளர்ந்துவரும் பருவம் முழுவதும் அவ்வப்பொழுது செயற்கை உரங்களை முறையாக இட்டு வந்தால் தான் பயிர்கள் செழித்து வளரும், அப்பொழுது தான் நல்ல பலன்களும் கிட்டும் என்று வழக்கமாக நம்பிவந்த கொள்கையால் அதிகச் செலவு ஏற்பட்டது. பயிர்த்தொழிலில் ஏற்படும் செலவில் பெரும் பங்கு உரத்தினால்தான் ஏற்பட்டது. இத்துறையில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சி பெருந் துணை புரிந்தது. கதிரியக்கப் பாஸ்வர ஓரிடத்தான் பாஸ்வரத்தைத் தாவரம் என்ன செய்கிறது என்பதைத் திட்டமாகப் புலப்படுத்திற்று. (படம்-37). பாஸ்வர உரத்துடன் கதிரியக்கப் பாஸ்வர ஒரிடத்தானைக் கலந்து பயன்படுத்தின பொழுது இவ்வுண்மை தெரியவந்தது.

ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர்கள் உரத்திலுள்ள பாஸ்பேட் உப்பை உரம் மண்ணில் தூவப்பெற்றவுடன் சிறிதும்


  1. 6 சத்துப் பொருள்கள் - nutrients.