பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழிலும் அணுவும்

233


 தாமதமின்றி தாவரங்கள் ஏற்றுக்கொள்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள் கால் நடைகள் மேயும் புல் வெளிகளிலுள்ள புற்களின் இதழ்கள் பாஸ்பேட் உப்பை ஏற்றுக்கொள்கின்றன என்றும், எனவே பாஸ்பேட்

பாஸ்வரத்தை நிலம் எவ்வளவு நிலைநிறுத்துகிறது, தாவரம் அதை எவ்வளவு ஏற்கிறது, உரத்தின் திறன் எவ்வளவு-என்பதைப் படம் விளக்குகிறது

உரத்தை மேற்படி புலத்தை உழவுசெய்யாமல் புற்றரையில் தூவினாலேபோதும் என்றும் கண்டறிந்துள்ளனர். மக்காசோளம்[1] புகையிலை, பருத்தி ஆகிய பயிர்கள் இளஞ்செடி. செடிகளாக வளரத் தொடங்கும்பொழுது மட்டிலுமே பாஸ்பேட்டை ஏற்கின்றன என்று சோதனை காட்டிற்று. எனவே, இப்பயிர்கள் சாகுபடியாகும் புலத்தில் தொடர்ந்து உரத்தை


  1. 7 மக்காசோளம் - maize.