பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多$8 அணுவின் ஆக்கம்

உறைந்த ஆற்றல் : கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல் தாவரங்களின் ஒவ்வோர் அணுவிலும் அடங்கிக் கிடக் கின்றது என்பதை மேலே கண்டோம். இந்த ஆற்றல்தான் பூமியிலிருந்து கிடைக்கும் நிலக்கரியிலும் மண்ணெண்ணெய் போன்ற திரவ எரியைகளிலும் ' அடங்கிக் கிடக்கின்றது. நிலக்கரி என்பது என்ன ? பண்டைக் காலத்திலிருந்த காடுகள்தாம் காலப்போக்கில் நிலத்தினுள் அழுந்தி உரு மாறின. அவற்றைத்தான் நாம் நிலக்கரி என்று வெட்டி எடுக்கின்ருேம். திரவ எரியைகள் யாவும் இப் பழைய மரங்களின் சாறுகளே யாகும். கதிரவன் ஆற்றலே உண்ட மரங்கள் யாவும் இவ்வாறு கரியாய், திரவ எரியைகளாய் மாறிய பின்னரும் அந்தப் பழைய பகலவன் ஆற்றல் அவற்றி ணுள்ளே அடங்கிக் கிடக்கின்றது. உன்னிப் பார்த்தால் இந்த ஆற்றல் ஒன்பது கோடி மைலுக்கு அப்பாலுள்ள கதிரவ னிடமிருந்து வருகின்றது என்றும், காலத்தைக் கணக்கிட டால் ஒன்பது கோடி யாண்டுகளுக்குமுன் இருந்து வருகிறது என்றும் அறிகின்ருேம். இங்ங்னம் காலத்தாலும் இடத் தாலும் சேய்மையிலிருந்து வரும் ஆற்றல்தான் இன்று நம் எதிரே எரிந்து வெப்பமாகவும் ஒளியாகவும் வெளிப்படுவது வியப்பே யன்ருே ? ஆற்றலோ உலகில் அழிவதும் இல்லை ; புதிதாக ஆவதும் இல்லை. அது மாறி மாறிப் போய்க் கொண்டேயிருக்கும். இது இயற்கையின் நியதி. ஆதலின், மரத்தின் உள்ளே அன்று புகுந்த ஆற்றல் அங்கேயே உறைந்து கிடக்கின்றது. அவ்வாறு உறைந்து கிடக்கும் ஆற்றல்தான் நம் உடலினுள்ளோ வெளியிலோ எரிதல் நிகழும்பொழுது உருகி வழிகின்றது. நாம் மீண்டும் சூட்டை யும் பெறுகின்ருேம் ; ஒளியையும் அடைகின்ருேம். எரிதல் நிகழுங்கால் பொதுவான இயக்கம் மாறி மிகுதியான இயக்கம் பிறக்கின்றது. நிலையில் பிறழ்ச்சி தோன்றுகிறது ; அவ்வளவுதான்.

ஆற்றலின் மூலம் : கதிரவனே ஆற்றல்கள் அனைத்திற் கும் மூலம் என்பதை நாம் அறிகின்ருேம் ; அறிவியல் ஆராய்ச்சியால் இவ்வுண்மை புலனுகின்றது. தாவரங்களின்

  • figs, stifloouésir - liquid fuels.