பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அணுவின் ஆக்கம்

ஈக்கள் ', கொசுக்கள் ', வெட்டுக்கிளிகள் ' போன்ற பூச்சிகளையும் கதிரியக்க முடையவைகளாகச் செய்து விடுகின்றனர் அறிவியலறிஞர்கள் அவற்றிற்குக் கதிரியக்க ஓரிடத்தான்களைக் கொண்ட பொருள்களே உண்பித்து அவ்வாறு அடையாள மிடுகின்றனர். இதல்ை அவற்றின் பழக்கங்கள் மாறிவிடுகின்றன, பறக்கும் எல்லேயும் முறை யும் மாறி சிறந்த கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. எடுத்துக் காட்டாக, ஒரு வகையான பெரிய ஈக்களில் 15000-க்குக் கதிரியக்கமுள்ள பாஸ்வரம் கலந்த பானம் கொடுக்கப் பெற்றது. இதனுல் அந்த ஈக்களின் உடலில் கதிரியக்க முள்ள அணுக்களைக்கொண்டு அவற்றை மறுபடியும் அடையாளம் கண்டறிய முடியும். அவற்றை ஒரிடத்தில் திறந்துவிட்டு அங்கிருந்து வெவ்வேறு தூரங்களில் பொறி களே அமைத்து அவற்றில் சிக்கிய ஈக்களைச் சோதித்தனர். இந்த ஈக்கள் ஒருநாளில் 4 மைல் செல்லக்கூடும் என்பது தெரிந்தது. பண்ணையில் ஈக்களை விடுவித்த இடத்திலிருந்து சில ஈக்கள் மொத்தம் 28 மைல் தூரம் சென்றிருந்தன. இவ்வாறு பூச்சிகளின் வாழ்க்கை இயல்புகளைப்பற்றி அதிகம் தெரிந்து அவைகளை எதிர்க்கத்தக்க சிறந்த வழிகளை அறிவியலறிஞர்கள் கண்டு வருகின்றனர். சில பூச்சிகளைப் பூச்சிக் கொல்லிகள் பாதிக்காமலிருப்பதற்கும் காரணம் கண்டறியப்பெற்றிருக்கின்றது. 54 (5ت6 يغني நச்சுத்தன்மை யுடைய பொருள்களே நச்சுத்தன்மை யற்றவையாக மாற்றி விடுகின்றனவாம். புதிய பூச்சிக் கொல்லிகளைக் கண்டறிய வும், உடனே அவைகளை யழிக்கும் மருந்துக்களைக் காணவும் இவ்வறிவு வழி காட்டுகின்றது. இதுபற்றிய ஆராய்ச்சியால் எதிர்காலத்தில் நிறைந்த பயன்விளையும் என்று நாம் எதிர் பார்க்கலாம். இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பல இடங்களில் கதிரியக்க ஓரிடத்தான்களைப் பயன்படுத்திப் புழுக்கள், வண்டுகள், அந்துப் பூச்சிகள் முதலிய பூச்சிப் பீடைகளின் வாழ்க்கை இயல்புகள் ஆராய்ந்து அறியப் பெற்று வருகின்றன.

  • Fääsir – flies. * Géréráðsir - mosquitoes.
  • வெட்டுக்கிளிகள் - locusts.