பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£52 அணுவின் ஆக்கம்

AASAASAASAASAAMASAMAMMAMMMMAMAMAMSMMAMAAASAASAASAASAAMMMAMSAASAASAAAS م۔ ----------سہ، سسمہ، مسے ، بہہ سمہمہ،

அடைகின்றன ; வேறு வழிகளில் செலவழியும் அதன் ஆற்றல், அதிக அளவு பாலே உண்டாக்குவதில் பயன் படுகின்றது. க தி ரி யக் க அயோடினேப் பசுக்களுக்குக் கொடுத்து இவ்விளைவினைக் கண்டறிந்துள்ளனர். இன்றும் எளிய தீவனங்களே உபயோகித்துப் பசுக்கள் எவ்வாறு பாலை உண்டாக்குகின்றன என்பதைக் கதிரியக்க ஓரிடத் தான்களைக்கொண்டு அறியலாம். கோழிகளின் இறகுகள் உண்டாகும் முறை, ஆடுகளின் கம்பள, உரோமங்கள் உண் உாகும் முறை ஆகியவற்றைக் கண்டறிவதற்குக் கதிரியக்கக் கந்தகம் பயன்படுகின்றது. பண்ணையாளர்களின் வளம் உலக மக்களின் வளமாகும். இங்ங்ணம் பல்லாண்டுகளில் விடைகாணக்கூடிய சில பிரச்சினைகளுக்கு சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் விடை காணமுடிகின்றது. கதிரியக்க ஓரிடத்தான்கள் இல்லையெனில் சில பிரச்சினை களுக்கு தீர்வு காணவே முடியாது என்றுகூடக் கூறலாம்.

கால்நடைப் பண்ணையில் தோன்றும் சில பீடைகளே ஒழிப்பதற்குக் கதிரியக்க ஓரிடத்தான்கள் பயன்படுகின்றன. ஆடுமாடுகளின் மேல்தோலிலுள்ள கீறல்களிலும் இடுக்கு களிலும் திருகு ஈக்களின் பெண்ணினங்கள் முட்டை யிடுகின்றன. முட்டைகளிலிருந்து வெளிப்படும் நெளி புழுக்கள் அந்த மிருகங்களின் சதையைத் தின்று கொடிய புண்களே உண்டாக்குகின்றன ; சில சமயங்களில் இப் புண்களால் அந்த விலங்குகள் இறந்து விடுவதுமுண்டு. இந்த ஈக்களால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய நஷ்டம் ஏற்படுகின்றது. கோபால்ட்டுக் கதிர் களைக் கொண்டு திருகு புழு ஈக்களில் ஆண் இனங்களே மலடாகச் செய்துவிடலாம். பெண் ஈக்கள் ஆண் ஈக்களுடன் ஒரே தடவைதான் கூடுமாதலின், மலட்டு ஈக்களுடன் கூடிய பெண் ஈக்கள் இடும் முட்டைகள் வளர மாட்டா. இவ்வாறு கணக்கற்ற மலட்டு ஆண் ஈக்களை விடுவிப்பதன் மூலம் இந்தப் பூச்சிப் பீடைகளை மிகவும் குறைத்து விடலாமென்று உழவுத் துறை அறிவியலறிஞர் கள் " நம்புகின்றனர்.

  • உழவுத் துறை அறிவியலறிஞர்கள் - agronomist.