பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அற்புத ஆற்றல்

11


ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனம்31 மனித நலனைப் பற்றிய இத்தகைய அரியதோர் ஆராய்ச்சி ஐக்கிய நாடுகளின் ஆதரவில் நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப் பூமண்டலத்திலுள்ள நாடுகள் யாவும் ஒன்றோடொன்று நட்பு முறையில் பழகி வருவதும், அவை கொண்டுள்ள பல்வேறு உறவு முறைகளும் ஓர் உலக ஸ்தாபனமாக வடிவெடுத்திருக்கின்றன. இன்று அந்த ஸ்தாபனம் அனைத்துலக மூலமாகவுள்ள அணுவாற்றலை. ஆராயத் தொடங்கியிருப்பது பயன் நிறைந்த எதிர்காலத்தைக் காட்டுவதற்கு அறிகுறியாக இருக்கின்றது. நாளடைவில் இவ்வாராய்ச்சி இவ்வுலகெங்குமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்க்கைத் தரத்தைக் கட்டாயம் உயர்த்தும்; வாழ்க்கை முறைகளையும் மாற்றும். இதில் சிறிதும் ஐயம் இருப்பதற்கு இடமே இல்லை. இதுகாறும் அறிவியல் வளர்ந்த வரலாற்றினைப் பார்த்தால் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மேதையால் கண்டறியப்பெற்றது என்பதுதெரியும். பல நாடுகளில் கண்டறியப்பெற்ற துறைகளாக இருப்பினும், அவை இன்று உலகெங்குமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பயன்படத்தான் செய்கின்றன. ஆனால், அவை ஒன்றேனும் பல நாட்டு அறிஞர்களும் கூடி ஆராய்ந்ததால் விளைந்தது என்று சொல்வதற்கில்லை. இன்று அணுபற்றிய ஆராய்ச்சியை இவ்வுலகெங்குமுள்ள அறிவியலறிஞர்கள் ஒருங்கு கூடி ஆராய்கின்றனர். இது அறிவியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம்; புதிய சகாப்தம் என்று கூடச் சொல்லலாம்.

மக்களின் பொறுப்பு: ஜெனிவா மாநாட்டு நடவடிக்கைகளை இன்றுள்ள மக்கள் அக்கறையுடன் அறிந்து கொள்ளவேண்டிய நிலையிலிருக்கின்றனர். அம்மாநாட்டின் முடிவுகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தொடர்பு கொண்டுள்ளன. ஆனால், அம்முடிவுகள் யாவும் அறிவியல் மொழியில் அமைந்துள்ளன. ஏன் ? அணுவியல் மொழியில்


31

ஐக்கிய ஸ்தாபனம் - United Nations Organization