பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14

தொழில்துறையில் அணு



திரியக்க ஓரிடத்தான்கள் தொழில் துறையிலும் பெரிதும் பயன்படுகின்றன. உயிரியல் துறையை நோக்க இத்துறையில் அவை இன்னும் அதிகமாகப் பயன்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். உயிரியல் துறையில் பல நூற்றுக்கணக்கான முறைகளில் பயன்படுகின்றன என்று ஆராய்ந்து அவற்றின் முடிவுகள் பருவ வெளியீடுகளில் வெளியிடப் பெற்றிருக்கின்றன; ஆனால், தொழில் துறையில் அவை பயன்படுவது நூற்றுக்கும் கீழே தான் இருக்கின்றது. இந்நிலை நீண்ட நாட்கள் நிலவும் என்று சொல்லமுடியாது. காரணம், தொழில் துறை ஆராய்ச்சியிலும் நடைமுறை வேலைகளிலும் கதிரியக்க யுக்தி முறைகளைப்[1]பயன்படுத்து வதில் பெருமுயற்சிகள் எடுக்கப் பெற்றிருக்கின்றன. வழி. துலக்கி முறைதான் பேரளவில் பயன்பட்டு வருகின்றது. இம் முறையைப்பற்றி நாம் முன்னரே அறிந்துள்ளோம். இதைத் தவிர, வேறு பயன்களும் உள. கதிரியக்கப் பண்புகளைச் சில ஆய்கருவிகளைக்[2] கொண்டு சில பிரத்தியேகமான செயல்களில் பயன்படுத்தலாம். அடியிற் கூறப் பெறும் எடுத்துக்காட்டுக்களில் சில ஆங்கிலேயருடையவை சில அமெரிக்கருடையவை. இன்னும் சில எண்ண


  1. 1 கதிரியக்க யுக்தி முறை-radioactive technique
  2. 2ஆய்கருவி- apparatus