பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

அணுவின் ஆக்கம்


ஏற்றத்தைத்3 தரும் கொள்கை நிலையில் இருப்பவை. காலப் போக்கில்-ஆனால், வெகு விரைவில்-இவை திட்டமான முறைகளில் நிச்சயமாகப் பயன்படும் என்று இப்பொழுதே சோதிடம் கூறி விடலாம்.

கதிரியக்க ஓரிடத்தான்களின் உற்பத்தியைப்பற்றி ஆராய்ந்தபொழுது அமெரிக்காவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்களுக்கு 35,000-க்கு மேற்பட்ட கப்பல் பாரங்கள் அனுப்பப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டோம் அல்லவா ? அவற்றுள் 40 சதவீத நிலையங்கள் தொழில் துறையைச் சேர்ந்தவை. ஆண்டுதோறும் கதிரியக்க ஓரிடத்தான்களின் பயன் தொழில் துறையில் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

கதிரியக்க ஓரிடத்தான்கள் தொழில் துறையில் பயன்படும் செயல்களே மூன்று வகைகளில் அடக்கிக் கூறலாம். அவை அளவிடுதல் அடையாளம் இடுதல், தேய்மானத்தைக் காணல் என்பவை. இம் மூன்றுவகைச் செயல்களும் பல்வேறு விதமாகப் பல்வேறு தொழில் துறைகளில் பயன்படுகின்றன. இவை ஒவ்வொன்றையும். பற்றி ஈண்டு. ஒரளவு அறிந்து கொள்வோம்.

அளவிடுதல்

கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளியாகும் கதிர்க் கற்றையின் தீவிரத்தில் நேரிடும் மாற்றத்தைக் கணக்கிட்டே அளவிடுதல் செயல்களை மேற்கொள்ளப் பெறுகின்றன. கதிரியக்கப் பொருள்கள் கதிரியக்கத்தை விளைவிக்கும் மூலமாகப் பயன்படுத்தப் பெறுகின்றனவேயன்றி, பொருள் உற்பத்திக் கிரியையிலோ. அன்றி உற்பத்திப் பொருள்களிலோ அவை சேர்க்கப் பெறுவதில்லை.

கனத்தை அளக்கும் கருவி : கதிரியக்கமுள்ள கனத்தை, அளக்கும் கருவி நடைமுறைச் செயல்களைக் கண்டறியும் கருவிகளில் தலைசிறந்தது. அமெரிக்காவில் இன்று 200-க்கு,


3எண்ண ஏற்றம்-suggestion