பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்துறையில் அணு

261



மேற்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பெறும் தகடு வடிவத்திலுள்ள பல்வேறு பொருள்களின் கனத்தைத் கண்டறிவதற்கு இக்கருவி பயன்படுத்தப் பெறுகின்றது. இவ்வாறு அளவிடப்பெறும் பொருள்களில் கார்பன் தாள், மெழுகுத்தாள், பொருள்களை மூடுவதற்குப் பயன்படுத்தும்தாள் போன்ற காகிதங்களும் ; அலுமினியத் தகடு, தாமிரத்தகடு, எஃகுத் தகடு, தகரத் தகடு போன்ற தகடு வகைகளும் ; பல்வேறு வகை பிளாஸ்டிக் பொருள்கள், ரப்பர் பொருள்கள், கூரை வேய்வதற்கும் தரையில் பரப்புவதற்கும் உபயோகப் படும் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள், கயிறு இழைகள், புகைப்படப் பிலிம்கள், பூச்சுப் பூசிய வேறு தகடு வகைகள் ஆகிய பொருள்களும் அடங்கும்.

எல்லாக் கருவிகளிலும் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவை : கதிரியக்க மூலம் (பெரும்பாலும் பீட்டாகதிரியக்கம்), கதிர்வீச்சினைக் காணவும் அதனை மின்னோட்டமாகவும் மாற்றக்கூடிய அயனி அறை, இந்த மின்னோட்டத்தை அதிகரிக்கச் செய்யும் பெருக்கி[1], மின்னோட்டத்தில் நேரிடும் ஏற்றக் குறைவுகளைக் குறிக்கும் பதிவுக் கருவி ஆகியவை. இப்பதிவுக் கருவியின் அளவுகள் பெரும்பாலும் கன அளவுகளையே[2] காட்டக் கூடியவை.

கனத்தை அளக்கும் கருவிகளில் வெவ்வேறு இரண்டு வகைக் கருவிகள் செய்யப்பெற்றுள்ளன. முதல் வகை, உறிஞ்சும் கன அளவு கருவி என்பது. இதில் அளக்கப் பெறவேண்டிய பொருள் கதிரியக்க மூலத்திற்கும் அளவிடும் சாதனத்திற்கும் இடையில் செல்லும். கதிர்வீச்சு, பொருளை ஊடுருவிச் செல்லும்பொழுது அதன் தீவிரத்தில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் பெறுகின்றது. ஊடுருவிச் செல்லும் கதிர்வீச்சின் அளவு பொருளின் கனத்திற்குத் தலைகீழ் விகிதப் பொருத்தத்தில்[3] உள்ளது. அஃதாவது, பொருளின் கனத்திற்கேற்றவாறு கதிர்வீச்சின் அளவு குறையும்.


  1. 4 பெருக்கி - amplifier
  2. 5 கன அளவுகள்- thickness readings.
  3. 6 தலைகீழ் விகிதம் - inverse proportion.