பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

அணுவின் ஆக்கம்


அடையாளமிடுதல்[1]

அடையாளமிடுதற்கும் கதிரியக்க ஓரிடத்தான்களைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் அவற்றைச் சில பொருள்களில் அல்லது கிரியைகளில் வழி-துலக்கிகளாகப் பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பயன்படுத்தும் சில யுக்திமுறைகள் நடைமுறை உற்பத்திப் பிரச்சினைகளில் பயன்படுகின்றன. இன்னும் சில, ஆராய்ச்சியிலும் வளர்ச்சித் துறையிலும் உபயோகப்படுகின்றன. எனினும், எல்லாத் துறைகளிலும் கதிரியக்க ஓரிடத்தான்கள் வழிதுலக்கிகளாகத்தான் பயன்படுகின்றன. அவை தம் இருப்பிடத்தை அறிவதற்கும், ஒரு குறிப்பிட்ட பொருள் நகர்வதை அறிவதற்கும், அல்லது ஒரு திட்டமான பொருள் செல்லுவதைக் காண்பதற்கும் உபயோகப்படுகின்றன.

கடுவினை ஆக்கி[2]யின் சுற்று: மேற்கூறிய முறை பெட்ரோலியம் தொழிற்சாலையில் பயன்படுகின்றது. இன்னும் நாம் பயன்படுத்தும் காஸோலின்[3] 'பெட்ரோலியத்தின் கனமான வடிதிரவத்திலிருந்து[4] உற்பத்தி செய்யப்பெறுகின்றது. ஒரு முறையில் நுண்துளையுள்ள மிகச் சிறிய மணிகள் வடிவில் கடுவினை ஆக்கி ஆவி நிலையிலுள்ள எண்ணெயுடன் சேர்க்கப்பெறுகின்றது. இந்த மணிகள் அணு உலையின் வ்ழியாக அடியில் படிந்ததும், அவை கார்பனால் அடைபட்டுப் போகின்றன; மீண்டும் சுற்றிவரச் செய்வதற்கு முன் அவற்றை எரிக்க வேண்டும். இவ்வாறு மணிகளைப் புத்துயிர்பெறச் செய்த பிறகு மீண்டும் அவை அணு உலையின் மேற்பகுதிக்கு ஆவி - தூக்கி மூலம்,[5]

அஃதாவது விசையுள்ள காற்றுப் பிரவாகத்தால், கொண்டு செல்லப் பெறுகின்றன. இக்கிரியை முழுவதும் தொடர்ந்து நடை பெறவேண்டியிருப்பதால், ஒவ்வொரு படியின் திறன் கடுவினை ஆக்கி சுற்றிவரும் வேகத்தின் அளவைப் பொறுத்திருக்கின்றது.


  1. 11அடையாளமிடுதல்'- marking.
  2. 12கடுவினை - catalyst
  3. 13 காஸோலின் - gasoline.
  4. 14 வடிதிரவம் - distlitate
  5. 15ஆவிதூக்கி- gas lift.