பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்துறையில் அணு 26ぎ

இவ்வாறு சுற்றிவரும் வேகத்தை அளப்பது மிகவும் சிரமமான செயல். அண்மைவரையில் அணு உலையில் பல இடங்களில் சூட்டு நிலை ஏற்ற - இறக்கங்களை அளந்து இது நிறைவேற்றப் பெற்றது. இதை அளந்து காண்பதற்கு இருவர் ஒரு நாள் முழுவதும் வேலை செய்தாகவேண்டும். அது நேரல் முறையில்" அடையப்பெறுவதாலும், அடைவ தற்கு முன் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பெற வேண்டி யிருப்பதாலும், அந்த அளவை நம்பத்தக்கதாகக் கொள்ள முடியவில்லை.

மிக அண்மையில் இதே அளவை நேர்முறையில் காணும் வழியைக் கண்டறிந்துள்ளனர். ஒரு சில மணிகளைக் கதிரியக்க ஸர்க்கோனியத்தால் சூல் கொள்ளச் செய்து ஒரு கதிரியக்க மணி ஆவி-தூக்கிக்கும் அணு உலையின் உச்சிக்கும் இடையிலுள்ள கடுவினே ஆக்கியைக் கொண்டு செல்லும் குழலில், செல்லும் கால இடையீட்டைக் கண்டறிகின்றது. குழலில் இந்த இரண்டு இடங்களுக் கிடையேயுள்ள கடுவினே ஆக்கியின் எடையை அறிந்து இரண்டு உச்சக் கதிரியக்க அளவுகளிலிருந்து ஒரு மணிக்கு எத்தனை டன் வீதம் மேற்படி கடுவினே ஆக்கி சுற்றுகிறது என்பதைக் கணக்கிடலாம். அமெரிக்க எண்ணெய் கம்பெனி ஒன்றில் இம்முறையை மேற்கொண்டு நாளொன் றுக்கு ஆயிரக்கணக்கான டாலர் செலவைக் குறைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இன்று எல்லாக் கம்பெனி களிலும் இம்முறைதான் மேற்கொள்ளப்பெறுகின்றது.

பெட்ரோலியக் கம்பெனிகளில்: இன்னும் சில பெட்ரோலியத் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான நீளமுள்ள குழல்கள் பல்வேறு எண்ணெய்ப் பொருள்களைக் கடத்துவதற்குப் பயன்படுகின்றன. அக்குழல்களின் வழியாகப் பல பொருள் கள் தொடர்ந்து செலுத்தப்பெறுகின்றன. அங்ங்னம் செல்லுங்கால் ஒன்றனுடன் பிறிதொன்று கலக்காதிருக்கும் பொருட்டு அவை குழலினுள் செல்லுங்கால் ஒன்று எவ்விடத்தில் முடிந்து பிறிதொன்று எங்கு தொடங்குகிறது

  • நேரல் முறையில் - indirectly