பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொழில்துறையில் அணு

269


அடியிலுள்ள பல்வேறு தகவல்களைக் கண்ட்றியப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேல் நாடுகளில் குழாய் வழியாகச் செலுத்தப்பெறும் தபால் பைகளில் கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள கோபால்ட்டை ஒட்டி வைத்து அவை நடுவில் சிக்கிக்கொள்ளும்பொழுது கைகர் எண்-கருவி கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்கின்றனர். இத்தகைய செயல்களில் கதிரியக்க அணுக்கள் மாயக்கண் போல் (magic eye) செயலாற்றுகின்றன.

புவியின் அடியிலுள்ள கணிப்பொருள்களைக் காண்பதில் மற்றும், கதிரியக்க ஓரிடத்தான் உளவுகாட்டும் வழி-துலக்கிகள் பெட்ரோலிய உற்பத்தி நிலையங்களில் கணிப்பொருள்கள் இருக்கும் இடத்தை அறிவதிலும் அப்பொருள்களே அளவிடுதலிலும் பயன்படுவதுடன், அப்பொருள்களைத் துாய்மைப்படுத்திய பிறகு அவற்றைச் சோதிக்கவும் உபயோகப்படுகின்றன். அவற்றிலெல்லாம் கதிரியக்கக் கார்பன்தான் பெரிதும் பயன்படுகின்றது. எண்ணெய் எடுக்கப்பெறும் புலங்களில், பூமியின் அடியில் உள்ள தகவல்களைப்பற்றி அறிவதற்கு அயோடின், குளோரின், கோபால்ட்டு, கால்சியம் போன்றவற்றின் கதிரியக்க ஓரிடத்தான்கள் துணை செய்யக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அன்றியும், இன்று புவியின் அடியிலுள்ள எண்ணெய் ஊற்றுக்களைக் காண்பதிலும், அவை செல்லும் வழிகளையெல்லாம் அறிவதிலும் கதிரியக்க ஓரிடத்தான்களைக் கொண்டு வழி. துலக்கி அறியும் முறைகளைப் பயன்படுத்துவதில் முனைந்திருக்கின்றனர். ஓர் எண்ணெய்க் கிணற்றில் எண்ணெயில் கரைத்தோ அல்லது வாயு வடிவில் செலுத்தியோ பல்வேறு வரிசைகளில் ஒன்றன்பின் ஒன்ருக அனுப்பப்பெறும் கதிரியக்க ஓரிடத்தான்கள் பக்கத்திலிருக்கும் கிணறுகளில் உள்ள எண்ணெய்களை எடுத்து அவற்றில் இவ்வோரிடத் தான்கள் உள்ளனவா என்று சோதிக்கப்பெறுகின்றன (படம்-48). இதனுல் கிடைக்கும் தகவலக் கொண்டு எண்ணெய் ஊற்றுக்கள் செல்லும் வழிகளையறிந்து அங்கு பூமியைத் துளைத்து எண்ணெய் எடுக்கலாம்.