பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

அணுவின் ஆக்கம்


நிறுத்திவிடக்கூடிய யுக்திச்சாதனத்தை அமைத்துப் பொறியை நின்றுவிடவும் செய்யலாம். எடுத்துக்காட்டாக, துளையிடும் இயந்திரத்தை25 இயக்குபவர் சரியான காலத்திற்குள் தம் கைகளே வெளியே எடுக்கத் தவறினால் கையிலுள்ள மணிக்கட்டுப்பட்டி26யிலிருந்து வெளிப்படும் கதிர்கள் சில கருவிகளை இயக்கி இயந்திரத்தை நிறுத்திவிடும்.

இன்று உலகெங்கும் தொடுப்பு அணுக்கள் மானிட நலனுக்காகச் சேவை செய்து வருகின்றன. இத்தாலி நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் வழியாக புவிக்குக் கீழே செல்லும் நீரூற்றுக்களைச் சோதிக்க அவை பயன்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் புவியின் கீழ் புதைக்கப் பெற்றுள்ள தொலைபேசிக் கம்பிகளின் காற்றுப் புகாத தன்மையைச் சோதிக்கவும், வட ஆப்பிரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே அமைக்கப் பெறும் கடற்கீழ்த்தந்திகள்27 பற்றிய வேலையில் துணை செய்யவும் அவை பயன்படுகின்றன. அமைதிக் காலத்தின் அணுவின் பயனுக்கு இவை ஒரு சில எடுத்துக்காட்டுக்களாகும்.

தேய்மானச் சோதனைகள்

தேய்மானச் சோதனைகளிலும் கதிரியக்க ஓரிடத்தான்கள் பயன்படுகின்றன. இவை அன்றாட நடைமுறைச் செயல்களில் பயன்படாவிட்டாலும், உற்பத்தியாளர்களுக்கு மிகவும் இன்றியமையாதவைகளாக உள்ளன. உற்பத்தியாளர்கள் தேய்மானத்தையும் கருத்திற் கொண்டு தானே பொருள்களே உற்பத்தி செய்யவேண்டும் ? கதிரியக்க ஓரிடத்தான்கள் மிக நுட்பமானவையாதலின், அவற்றைக் கொண்டு தேய்மானத்தை அளக்கும் முறை ஏனைய முறைகளை விடச் சிறந்தவை; அன்றியும், சரியாகவும் குறுகிய காலத்திற்குள்ளும் அளப்பதற்கு ஏற்றவை


25துளையிடும் இயந்திரம் - punch press. 26மணிக்கட்டுப் பட்டி- wrist band. 27கடற் கீழ்த் தந்திகள் - under sea cables