பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்துறையில் அணு

277


 தொழிற்சாலைகள் வாங்கி தம் பிரச்சினைகளில் பலவற்றிற்கு எளிய வழிகளில் விடை காண்கின்றன. சில தொழிற்சாலைகள் கதிரியக்க ஓரிடத்தான்களை வகைப்படுத்தி அவற்றைப் பயன்படுத்தத் தக்க கருவிகளே உற்பத்தி செய்கின்றன. அணுவாற்றல் குழுவின் இசைவு பெற்றுப் பல்கலைக் கழகங்களும் தொழிலாராய்ச்சி நிலையங்களும் சிறிய அணு உலைகளே விலைக்கு வாங்கமுடியும்.

அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளில் தொழில் துறையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் பல புரட்சிகரமான மாறுதல்களே உண்டாக்கும் என்பது அறிவியலறிஞர்களின் நம்பிக்கை. இந்த மாறுதல்கள் மெதுவாகத்தான் நடை பெறும். காரணம் ,கதிரியக்கப் பொருள்களைக் கையாளும் பொழுது அவற்றின் கதிர்களால் ஆய்வாளர்களுக்கும் ஏனைய ஊழியர்கட்கும் தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கும் முறைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. எனினும், தொழிற்சாலைகளில் அணுவாற்றலின் பயன் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.