பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்காலத்தில் அணுவாற்றல்

287

விடுகின்றது. ஆல்ககாலும்[1] வேறு பல கரிமப் பாய்மங்களும்[2] அதனை எளிதில் கரைத்துவிடுகின்றன. ஆனால் அதனைக் கதிர்வீசலுக்குட்படுத்தினால் அதன் அணுத்திரளை யமைப்பில் வியத்தகு மாற்றங்கள் உண்டாகின்றன, முதலில் அதன் கரைதல்-தடை [3]அதிகமாகிறது: 115C அல்லது அதற்கு மேற்பட்ட சூட்டு நிலையிலும் அது திரவ நிலையை அடைவதில்லை. இதுவும் இதுபோன்ற பிற மாற்றங்களும் பாலிஎத்திலீன் என்ற பிளாஸ்டிக் பொருளைப் பல்வேறு வகைகளிலும் பயன்படச் செய்யக்கூடும். மகளிர் பயன்படுத்தும் ஸ்டாக்கிங்ஸை உற்பத்தி செய்வோர் அணு வாற்றலைப் பயன்படுத்தி அவை விரைந்து கிழியாமல் நீண்ட நாள் நீடிக்கக்கூடியதாக உற்பத்தி செய்யும் காலம் அதிகத் தொலைவில் இல்லை.

பேரக்கு-வரவு: அணுவாற்றலின் உபயோகம் உற்பத்தித் துறையுடன் நின்றுவிடப் போவதில்லை. அது போக்கு-வரவு சாதனங்களில் புரட்சிகரமான வடிவத்தில் பயன்படப் போகிறது என்று எதிர்பார்க்கலாம். நீர் மூழ்கிக் கப்பல்களைச் [4]செலுத்தும் பொறிகளை அமைப்பதில் முயற்சி எடுக்கப்பெற்று அதில் ஓரளவு வெற்றியையும் கண்டு விட்டனர். சாமான் செலுத்தும் கப்பல்களிலும் மக்கள் ஏறிச் செல்லும் பிரயாணக்கப்பல்களிலும் அணுப் பொறிகளை அமைத்து அவற்றைச் செலுத்தும் திட்டம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. காற்பந்து[5] 35 அளவுள்ள புரேனியத் தைக்கொண்டு இந்தக் கப்பல்களை மீண்டும் மீண்டும் எரியைகளைப் போடாது உலக முழுவதையும் சுற்றி வருவதற்குப் பயன்படுத்தலாம்.

எதிர்காலத்தில் தண்டவாளங்களில் செல்லும் ஊர்தி களும் விமானங்களும் அணுவாற்றலாலேயே செலுத்தப் பெறலாம் என்று அணுவியல் நிபுணர்கள் சோதிடம் கூறு-


  1. 31. ஆல்ககால் - alcohol.
  2. 32 கரிமப் பாய்மம் - organic fluid
  3. 33 கரைதல்-தடை - solubility resistance.
  4. நீர் மூழ்கிக் கப்பல் - submariner
  5. காற்பந்து - soccer ball.