பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16. மங்கல வாழ்த்து



"அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தில் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்துஎன யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே."

[1] இது அணுயுகம். 'அணுவிற்கு அணுவாகி' என்று அருள் நூல்கள் பாராட்டும் அணுவைத் துருவித்துருவி ஆராயுங்காலம் ; அண்டங்களின் அமைப்பும் அணுவின் அமைப்பும் ஒன்றே என்று உலகிற்கு எடுத்தியம்பிய காலம். அணுவைப்பற்றிய செய்திகள் யாவும் சேர்ந்து ஒரு தனி அறிவியல் துறையாக வடிவெடுத்து விட்டன. அதனே அணுவியல்[2] என்று வழங்குவதைவிட உட்கருவியல்[3] என்று. வழங்குவதே பொருத்தம். இப்புதிய துறை பெளதிக இயலின் பிரிவு மட்டுமன்று; பெளதிக இயலும்[4] வேதியலும் [5]இணைந்த பிரிவின் அடிப்பகுதியில் அமைந்த ஒரு


  • விநாயகரகவல் - வரி (64-71) * அணுவியல் - atomics. உட்கருவியல் - nucleonics, பெளதிக இயல் - physics. " வேதியியல்- chemistry.
  1. விநாயகரகவல் - வரி (64-71)
  2. அணுவியல் - atomics.
  3. உட்கருவியல் - nucleonics,
  4. பெளதிக இயல் - physics.
  5. வேதியியல்- chemistry.