பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

8 அணுவின் ஆக்கம்


கண்டறியப் பெற்ற கருத்துக்களையும் செய்திகளையும் கொண்டு அவ்வுலைகள் நிறுவப் பெற்றன. 1940-ஆம் யாண்டு வரையிலும் ஒருவர் கூட அணு உலையை அமைக்க முடியும் என்பதைக் கற்பனையிலும் நினைந்து பார்க்கவில்லை. 1940-ஆம் யாண்டில்தான் இப்புத்தறிவு ஒர் அமைப்பாக வடிவெடுத்தது.

பல நாடுகளின் பங்கு : இப்புத்தறிவின் கதையில் எல்லா நாடுகளும் தொடர்பு கொண்டுள்ளன. 1895-ஆம் யாண்டில் ஜெர்மெனியில் இக்கதை தொடங்கியது. ராண்ட் ஜென் என்பார் திடப்பொருளையும் ஊடுருவிச் செல்லக் கூடிய புதிர்க் கதிர்களைக் கண்டறிந்தார். அடுத்த யாண்டில் (1896) பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பெக்கெரல் 9 என்பார் அத்தகைய கதிர்கள் யுரேனியத்திலிருந்தும் அதன் கணிப் பொருள்களிலிருந்தும் இயல்பாக எழுவதைக் கண்டார். 1898-ல் பியரி குயூரி-மேரி குயூரி[1] என்ற தம்பதிகள் ரேடியத்திலிருந்து ஆற்றல் வாய்ந்த மிகச் சிக்கலான கதிர் வீச்சு மூலத்தைக் கண்டனர். இவர்கள் இருவரும் பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்தவர்களே. அதன் பிறகு ரதர் போர்டு [2]' என்பார் கதையின் பாத்திரமாகின்றர். அவர் 1902-ல் கனடா நாட்டில் அணுக்கள் தாமாகச் சிதைந்தழிதலால் கதிர் வீச்சு ஏற்படுகின்றது என்று விளக்கினர். பிறகு இங்கிலாந்தில் 1911-ல் அணுவில் உட்கரு என்ற ஒருபகுதி இருக்க வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டினர் ; 1919-ல் நைட்ரொஜென் கருவின ஆல்பா - துணுக்குகளைக்கொண்டு தாக்கி ஒரு துணுக்கினத் தகர்த்தெறிந்தார். ரதர்போர்டு என்பார் உட்கருவுள்ள அணுவினப்பற்றிக் கொண்ட கருத்தை 1913-ல் ஒரு விரிவான சரியான கொள்கையாக வளர்த்து விட்டார் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நீல்ஸ் போர்[3] என்ற அறிஞர். இந்நிலையில் ஜெர்மெனியிலிருந்த ஐன்ஸ்டைன்[4] என்பார் 1905-ல் தம்முடைய ஒப்புநோக்குக்


  1. 11. பீயூரி குயிரி மேரி கியூரி-piere கியூரி -marie கியூரி curie
  2. 12.Ruther foard - ரூதர்போர்டு
  3. 13. நீல்ஸ்போர்-neils bohr
  4. 14.ஐன்ஸ்டைன்-Einstain