பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல வாழ்த்து. 30 p.

AMAMAAA AAAA Sہ-عہ:۔ سبزہ۔ مدت. ممبع مجمہ*بیہ میچ

iA AeeeAeAs

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொறியியல் துணுக்கம், நிர்வாகத்திறன், தொழில் துறை ஆற்றல் ஆகியவைகளும் கோடிக்கணக்கான டாலர்களை இதுகாறும் யாரும் செய்து பார்க்காத துறையில் செலவழிக்கும் தைரியமும் சேர்ந்து ஆராய்ச்சிக்கு வேண்டிய செளகரியங்களே அளித்தன. இவை மூன்றும் சேர்ந்து சாதாரணமாக ஐம்பது யாண்டு களில் நிறைவேறக் கூடியவற்றை ஐந்தாண்டுகளில் முடி வுறச் செய்தன. 1945-ஆம் யாண்டில் உட்கருவியலும்" அணு உலேப் பொறியியலும் ' திகைப்புற்றிருந்த உலகின் மேல் முழுவளர்ச்சியுடன் வெளிப்பட்டன. அவற்றின் அளப் பறிய பயனே அணுகுண்டு வீச்சுக்களால் இவ்வுலகம் அறிந் தது. 1955-ஆம் யாண்டில் ஐ. நா. சபையின் ஆதரவில் அமைதியில் அணுவின் பயனே ஆராயும் மாநாடு ஒன்று ஸ்விட்லர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவாவில் கூட்டப்பெற்ற நாள் வரையிலும் பத்து ஆண்டுகளில் கண்டறிந்த செய் திறன்கள் யாவும் மறைப் பொருள்களாகவே வைக்கப்பெற். றிருந்தன. இவ்வாறிருந்தமைக்குக் காரணம் அச்சம்' என்ற போர்வையால் இவ்வுலகம் சூழப்பெற்றிருந்தமையே என்றுதான் சொல்ல வேண்டும். மாநாட்டிற்குப் பிறகு இவ்வுலக நாடுகள் புதிய உற்சாகத்தைப் பெற்றிருக்கின்றன, உட்கருவியல் துறை மானிடவர்க்கத்திற்கே ஒரு கருவூலம் போலிருப்பதை எல்லா நாடுகளும் உணர்ந்துவிட்டன. ஐம்பதுக்கு மேலான நாடுகளிலிருந்து வரும் அறிவியல் அறிஞர்கள் கூடி ஆராய்ந்து தொழில் நுணுக்கத் தகவல் களேத் தத்தமக்குள்ளே பரிமாறிக் கொள்ளுகின்றனர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த குறிக் கோளுடன் பல நாடுகள் உறவு கொண்டிருப்பது ஓரளவு நமக்கு ஆறுதல் அளிக்கின்றது.

எதிர்காலத்தில் அணுவாற்றலால் உலகம் . உய்யக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. எல்லா நாடு களும் அணுவைப்பற்றித் தாங்கள் அறிந்த உண்மைகளையும்

  • *-lis@ouse - nuclear science, * signia &urs GLTsjuju Isb - reactor engineering.