பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல வாழ்த்து 器翰器

SAASAASAASAAMMMAAASAASAASAASAASAASAASAASAA AAAAMMAAASA SAASAASSAAAAAASAAAA

வாராய்ச்சியில் அதிக முன்னேற்றம் பெற்ற அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, இரஷ்யா போன்ற நாடுகள் சர்வதேச அணு பாங்கிக்கு அதிகமான பங்குகளை வழங்குவர். அணுவைப்பற்றி அதிகம் தெரியாதனவும் அணுவாற்றல் மூலங்கள் குறைவாகவும் உள்ள நாடுகள் இந்த பாங்கியிலிருந்து உதவிகள் பெறும். அணுவாற்றல் பொருள்களை வழங்குவதில் இந்தப் பாங்கி மிகவும் கண்டிப் பாக இருக்கும் ; இங்கு உதவிபெற்ற எந்த நாடுகளும் அப் பொருள்களைக்கொண்டு அணு வாயுதங்களே உற்பத்தி செய்யாதவாறு கண்காணிக்கும். ஆராய்ச்சிக்கும் வேறு பல நன்மைகளை விளைவிக்கும் துறைகளில் பயன்படுத்து வதற்கு மட்டிலுமே இப் பாங்கியிலிருந்து பொருள்கள் வழங்கப் பெறும்.

இந்தப் பாங்கி திறம்பட இயங்குவதற்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் தனித்தனியாக முறையே 220 இராத்தல், 44 இராத்தல் பக்குவிடும் பொருள்களை வழங்கியிருக் கின்றன. அமெரிக்கா 220 இராத்தல் வழங்கியது சாதாரண விஷயமல்ல. அப்பொருளைப் பணமாக்கினுல் கிட்டத்தட்ட இருபது இலட்சம் டாலர் ஆகும் ஆற்றலாக்கினல் இரண்டரை இலட்சங் கோடி கிலோவாட் ஆகும். அன்றி யும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் எல்லா நாடுகளுக்கும் ஆராய்ச்சி அணு உலைகளைப் பாதி விலைக்கு வழங்குவதாக வும் அவ்வுலேகளுக்குத் தேவையான எரியைகளே இனுமாக வழங்குவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளன. இதைத் தவிர அமெரிக்காவில் ஆர்கான் தேசிய ஆய்வகத்தில் ’ எல்லா நாடுகளின் சார்பில் ஒரு பயிற்சிப் பள்ளி தொடங்கப் பெற்றுள்ளது. அங்கு அணு உலைகளின் வளர்ச்சிபற்றி யும் அவற்றை இயக்கும் முறைகள்பற்றியும் பயிற்று விக்கும் ஏழு மாதப் படிப்பு தொடங்கப் பெற்றிருக்கின்றது. டென்னஸ்ஸி மாகாணத்தில் ஒக் ரிட்ஜ் " என்னுமிடத்தில் * g is, G3, f ourić - international atomic bank. ** sabiřargör G 5 fluu sob tî1615th - Argonne National Laboratory- * டென்னஸ் ஸி . Tennessee, "ஒக் ரிட்ஜ் - Qak Ridge