பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அணுவின் ஆக்கம்



அண்டங்க ளெல்லாம் அணுவாக

அணுக்கள் எல்லாம்

அண்டங்க ளாகப் பெரிதாய்ச்

சிறிதாயி னானும்

அண்டங்க ளுள்ளும் புறம்புங்

கரியாயி னானும்

அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர்.

அறிந்த நல்லோர். 5

என்று கூறுகிறார். இதில் அறிவியல் அனுபவ இயலாக முகிழ்த்துள்ளமையைக் கண்டு மகிழ்க. உயிரை நீக்கி விட்டால், சடம், சக்தி என்ற இரண்டினுள் இவ்வுலகினையே அடக்கிவிடலாம். சக்தியும் சடமும் ஒன்றே என்பது இன்றைய அறிவியல் கண்ட முடிவு. ஹிரோஷிமாவையும் நாகஸாகியையும் அழித்த சக்தி அணுவிலன்றோ அடங்கிக் கிடந்தது ?

வழக்கிலுள்ள பொருள்கள் : இவ்வுலகிலுள்ள பொருள்களில் அடிப்படையானவை 92 என்று மேலே கண்டோம். எனினும், வழக்கில் வருபவை பன்னிரண்டுக்கு மேல் இல்லை என்பதை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இது வியப்பினும் வியப்பாகும். உலகிலுள்ள பொருள்களை ஆயிரம் கூறுகளாகப் பகுத்துக்கொண்டால் ஏறக்குறைய பாதி, அஃதாவது 492 பங்கு உயிரியம். இந்த உயிரியம் காற்றில் ஐந்தில் ஒரு பங்கு ; நீரில் ஒன்பதில் எட்டு பங்கு. இது கல்லிலும் காணப்படும் பொருளாகும். சிலிக்கன்6 என்பது 257 பங்கு ; இது தரையில் நான்கில் ஒரு பங்கு, மணல் எல்லாம் சிலிக்கனோடு உயிரியம் சேர்ந்த சேர்க்கைப் பொருளாகும். அலுமினியம்7 74 பங்கு. இது களிமண்னில் அதிகமாகக் காணப்படுவது. இரும்பு8 47 பங்கு ; இது உயிரியத்தோடு சேர்க்கைப் பொருளாகக் கிடைக்கின்றது. கால்சியம்9 என்ற சுண்ணும்புச் சத்து 34 பங்கு.


5 திருவிளையாடற் புராணம் - பாயிரம் - செய்-6. 6 சிலிக்கன் - silicon. 7 அலுமினியம் - aluminium 8 இரும்பு - íron 9 கால்சியம் - calcium.