பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

அணுவின் ஆக்கம்


 பிறநாட்டு அணுவாற்றல் நிபுணர்களுக்காக கதிரியக்க ஓரிடத்தான்களை உற்பத்தி செய்யவும் அவற்றைக் கையாளவுமான நுட்பங்களைப் பயிற்றுவிக்கும் படிப்பு ஒன்று தொடங்கத் திட்டமிடப் பெற்றிருக்கின்றது. இதுகாறும் மறை பொருளாக வைத்திருந்த அணுவாற்றல் பற்றிய நுட்பமான தகவல்களையெல்லாம் அமெரிக்கா வெளியிட்டு வருகின்றது. அணுவின் ஆக்கத்திட்டம் சரியாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற வேண்டுமானால் எத்தனையோ செயல்களை ஒழுங்கு படுத்தியாக வேண்டும். திட்டம் நல்ல முறையில் தொடங்கப் பெற்றிருப்பதால் அது வெற்றிக்குக் கொண்டு செல்லப்படும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. நம்பிக்கையுடன் செயலாற்றினால் அனைத்தும் சீர்பெற நடை பெறும்.

ஐக்கிய நாட்டு ஸ்தாபனத்தின் கீழ் நிறுவப் பெற்றுள்ள பிரத்தியேகமான கழகங்கள் அதிக அக்கறையுடன் தாம் மேற்கொண்டிருக்கும் பொறுப்புக்களில் செயலாற்றத் தொடங்கியிருக்கின்றன. அவற்றுள் சிறப்பாக மூன்றினைக் குறிப்பிடலாம். முதலாவது: உலக சுகாதாரக் கழகம்"[1] இதன் முக்கிய பொறுப்பு உலக மக்களிடையே பரவி வரும் நோயைப் போக்கிச் சிறந்த சுகாதாரத்தை நிலவச்செய்வது. இரண்டாவது: உணவு-உழவுக் கழகம்.[2] இதன் பெரும் பொறுப்பு மக்களிடையேயுள்ள பட்டினிப் பேயையும் சத்துணவின்மையையும் அகற்றி உழவுத்தொழில், மீன் பண்ணை, காடுகள் வளர்ச்சி ஆகியவற்றைச் சிறப்படையச் செய்வது. மூன்றாவது: ஐக்கிய நாடுகளின் கல்வி -அறிவியல்-பண்பாட்டுக் கழகம்.[3] அறியாமையை அகற்றி கல்வியை மக்களிடையே பரவச் செய்வதும் பல துறைகளி-


  1. 41உலக சுகாதாரக் கழகம் - World Health Organization (W. H. O.)
  2. 42 உணவு - உழவுக் கழகம்.-Food and Agricultural Organization (F. A. O.)
  3. 43 ஐக்கிய நாடுகளின் கல்வி -அறிவியல்-பண்பாட்டுக் கழகம்.-United Nations Educational,Scientific and Cultural Organization (U.N.E.S.C.O.)