பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கல வாழ்த்து

307


கள்பற்றிய கைத்தொழில்கள் வளர்வதற்கு இடம் உண்டு. அன்றியும், அங்கு காகிதக்கூழ்[1] செய்யும் தொழிலும் காகிதத் தொழிலும் வளரக் கூடும். அணுவாற்றலின் துணை கொண்டு கடல் நீரை உப்பின்றி பிரிக்கக்கூடுமானால், வறண்ட நிலங்கள் வளமிக்க நிலங்களாகவும், பாலைவனங்கள் சோலைவனங்களாகவும் மாற்ற வசதிகள் பிறக்கும்.

இவற்றைத் தவிர உணவு- உழவுக் கழகம் அணு உலைகள் வளர்ச்சியையும் கதிரியக்க ஓரிடத்தான்களின் அதிக உபயோகத்தையும் ஒட்டி நீர்நிலைகள், விளைபுலங்கள், காற்று மண்டலம் முதலியவை கதிரியக்கப் பொருள்களாலும் கதிரியக்கக் கழிவுப் பொருள்களாலும் கெடா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருக்கின்றது.

எல்லா நாடுகளிடமும் ஒற்றுமையை வளர்த்து, தொழிற்றுறை வளர்ச்சி, தொழில் நுணுக்கத் துறை வளர்ச்சி ஆகியவற்றில் எழும் பல்வேறு பிரச்சினைகளிலும் தீர்வு காணும் பொறுப்பும் இக்கழகத்திற்கு உண்டு. எனவே, பல நாடுகளும் சேர்ந்து கூட்டாகச் செய்யும் ஆராய்ச்சித் துறைகளிலும் ஆலோசனை கூறுவதிலும் பணியாற்றி வருகிறது. அன்றியும், இக்கழகம் ஆராய்ச்சித் துறைகளில் கிடைக்கும் தகவல்களையும் அணுவாற்றல், கதிரியக்க ஓரிடத்தான்கள், கதிர் வீச்சுகள் ஆகியவற்றின் உபயோகம் பற்றிய செய்திகள், உணவூட்டத்துறை ஆராய்ச்சியில் கண்ட முடிவுகள் ஆகியவற்றைப் பல இடங்களுக்கும் பரப்பும் பொறுப்பையும் மேற்கொண்டிருக்கின்றது. இப்பொறுப்பில் கதிர்வீச்சால் ஏற்படும் கேடுகள் பற்றிய முக்கிய அம்சங்கள், உத்தேசமாக நேரிடும் ஆபாசங்கள் முதலியவையும் அடங்கும்.

நீரிலும் நிலத்திலும் உள்ள மூலங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பெறும் அணுவாற்றல் தொழில்பற்றியும் இக்கழகம் அக்கறை கொண்டிருக்கின்றது. அது பல்வேறு அரசுகளுக்கு ஆலோசனை கூறவும் பிற வழிகளில் உதவவும்,


  1. 44காகிதக்கூழ்- pulp