பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு-2 319


உள்ளகம் (core): அணு உலையில் உள்ள சுறுசுறுப்பாக இயங்கும் பகுதி. இதில்தான் பக்குவிடுதல் நடை பெறுகின்றது.

எதிர் மின்னி (electron) : அணுவைச் சுற்றிலுமுள்ள கோள் நிலை வட்டங்களிலுள்ள மின் துணுக்கு எதிர் மின்னுாட்டத்தைக் கொண்டது; எதிர் மின்சாரத்தின் மூல அளவும் இதுதான். ஓர் அணுவின் வெளிவட்டத்திலுள்ள இவைகளே அணுவின் வேதியற் பண்புகளுக்குக் காரண மாகின்றன. ஒர் எதிர்மின்னியின் எடை நேர்இயல் மின்னியின் எடையில் 1840-ல் ஒரு பங்கு.

எதிர் இயல் மின்னி (mason) : இந்தத் துணுக்கை ஜப்பானிய அறிஞர் ஹிடேகியூகோவா என்பார் 1985-ல் கண்டறிந்தார். இது நேர்இயல் மின்னியின் எடைக்கும் எதிர் மின்னியின் எடைக்கும் நடுத்தரமானது. அணுக்கருவில் தோன்றும் இது அற்ப ஆயுளே யுடையது; ஆகவே, இதனே இன்னும் அறிஞர்கள் சரியாக ஆராயவில்லை.

எறுழ் (erg) : ஒரு கிராம் எடையின் 980-ல் ஒரு பங்கினை (சராசரி ஆயிரத்தில் ஒரு பங்கினை) ஒரு சென்டி மீட்டர் உயரம் தூக்குவதற்கு வேண்டிய ஆற்றல்.

ஒளிச் சேர்க்கை (photosynthesis) சூரிய ஒளியைக் கொண்டு தாவரங்கள் இலைப்பச்சைத் துணுக்குகளின் துணையால் மாப்பொருளைத் தயாரிக்கும் கிரியை.

ஓரிடத்தான்கள் (isotopes) : ஒரே வேதியற் தனிமத்தின் பல்வேறு அணு வகைகள். இவற்றின் உட்கருக்களில் ஒரே எண்ணிக்கையுள்ள நேர் இயல் மின்னிகளும், சுற்றியுள்ள வெளி வட்டத்தில் ஒரே எண்ணிக்கையுள்ள எதிர்மின்னிகளும் இருக்கும். ஆகவே, அவற்றின் வேதியற் பண்புகள் ஒத்தவையாக இருக்கும். உட்கருவிலுள்ள பொது இயல் மின்னிகளின் எண்ணிக்கையில் மட்டிலும் தான் அவை வேறுபடும். எனவே, கருக்களின் பொருண்மையிலும், அணுக்களின் எடையிலும் அவை வேறுபடுகின்றன.