பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

அணுவின் ஆக்கம்



சமம். ஆகையால் ஒரு கிலோவாட்டு என்பது 1 1/3 குதிரைத் திறனாகும். பிரான்சு நாட்டில் ஒரு குதிரைத்திறன் 736 வாட்டுக்குச் சமம்.

குயூரி (curie) : ஒரு கிராம்-எடை தூய்மையான ரேடியம் தரக்கூடிய கதிர்ப்பு ஆற்றல் ; கதிர்ப்பு ஆற்றலை அளக்கும் திட்டமான அலகு.

குளிர்ப்பான் (coolant) : குளிரவைப்பதற்கு உதவும் எப்பொருளும் இப்பெயரால் வழங்குவது. திட்டமாகக் கூறினால் ஒரு திரவமோ வாயுவோ அணு உலையின் உள்ளகத்தினூடேயோ அன்றி அதைச் சுற்றிலுமோ சுற்றி வருமாறு செய்து குறைந்த சூட்டுநிலையில் அதனை வைத்திருப்பது.

கேமுயு-டூ (K mu-two) : அண்மையில் கண்டறியப் பெற்ற அணுவின் உள்ளகத்திலுள்ள ஒரு துணுக்கு. கிட்டத்தட்ட 21 துணுக்குகள் அணுவினுள் அடங்கியுள்ளன.

கேபை-டு (K pi-two) : இதுவும் அண்மையில் கண்டறி யப்பெற்ற துணுக்கே.

சடத்துவம் (inertia) : ஒரு பொருள் தன் நிலையில் மாறுதல் நிகழ்வதை எதிர்க்கும் பண்பு. இப்பண்பு எல்லாப் பொருள்களிடத்தும் உள்ளது. அசைவற்ற நிலையிலிருக்கும் ஒரு பொருள் தன்மீது ஒரு விசை (force) தொழிற்பட்டாலன்றித் தனது அசைவற்ற நிலையிலேயே இருக்க முயலும். சீரான நேர் வேகத்துடன் (velocity) இயங்கும் பொருள்களும் தம்மீது வேறு விசை செயற்பட்டாலன்றித் தாம் இயங்கும் நிலையிலேயே இருக்க முயலும்.

சிதைந்தழிதல் (disintegration): பிரிந்தழிதல் என்றும் இதனை வழங்குவர். கதிரியக்கமுள்ள தனிமத்தின் அணுக்கள் தாமாகவே இலேசான அணுக்களாக அடையும் மாற்றம். இம் மாற்றம் அடையுங்கால் ஆல்பா, பீட்டா, காமா-கதிர்கள் வெளிவிடப் பெறும்.