பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அணுவின் ஆக்கம்



உலகத்திலுள்ள தனிமங்கள் தனித்துக் காணப்பெறாமையால் அவற்றிற்கு உலக வழக்கில் பெயர்கள் இல்லை. ஆராய்ச்சியுலகில்தான் அவற்றிற்குப் பெயர்கள் வழங்குகின்றன. பல நாட்டினரும் இந்த அடிப்படைப் பொருள்களைப் பிரித்துக் காட்டுவதில் அரும்பாடு பட்டுள்ளனர். அதனால் கண்டுபிடித்தவரது நாட்டினை நினைப்பூட்டும் பெயர்களே அறிவியல் உலகம் அவர்கள் கண்டுபிடித்த பொருள்களுக்கு இட்டு வழங்கியது. அணுத்துறை அறிவியலறிஞர்கள் செயற்கை முறையில் கண்டறிந்த தனிமங்களுக்குப் பெயரிட்டதையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமாகும். பெரும்பாலும் அவர்கள் கதிரவன் குடும்பத்தினேயே அடிக்கடி நோக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தமையால், 92 அணு-எடையுள்ள பொருளை யுரேனஸ்16 " என்ற கோளின் பெயரையொட்டி யுரேனியம்17 என்று பெயரிட்டனர். நெப்டியூன்18 என்ற கோளின் பெயரையொட்டி நெப்டூனியம்19 என்ற தனிமத்தின் பெயர் அமைக்கப்பெற்றுள்ளது. புளூடோனியம்20 என்ற பெயர் புளுட்டோ21 என்ற கோளின் பெயரையொட்டி எழுந்ததாகும் என்பதை யூகித்து அறியலாம். கோள்களின் பெயர்கள் முடிவுற்றதும், நாடுகள், அறிவியலறிஞர்கள், நகரங்கள் இவற்றின் பெயர்களையொட்டி தனிமங்களுக்குப் பெயரிடும் முறை தோன்றியது. அமெரிசியம்,22 95 ; குயூரியம்,23 96; பெர்க்கிலியம்,24 97 ஆகியவற்றின் பெயர்களை நோக்குங்கள். இவற்றில் அமெரிசியம் அமெரிக்க நாட்டின் பெயரையொட்டியது ; குயூரியம் என்பது ரேடியத்தைக் கண்டறிந்த மேரிகுயூரி, பியரிகுயூரி என்ற தம்பதிகளின்25 பெயர்களின் அடிப்படையில் அமைந்தது. பெர்க்கிலியம் என்பது பெர்க்கிலி26 என்ற நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டது. பெர்க்கிலி


16யுரேனஸ் - Uranus. 17யுரேனியம் - uranium. 18நெப்டியூன் - Neptune 19நெப்டூனியம்-neptunium, 20புளூட்டோனியம் - plutomium, 21புளூட்டோ-Pluto, 22அமெரிசியம்-americium, 23குயூரியம் -curium, 24பெரிக்கிலியம் - berkelium, 25 பியரிகுயூரி - Pierre Curie, மேரிகுயூரி - Marie Curie. 26பெர்க்கிலி -Berkeley.