பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恕岛伞 அணுவின் ஆக்கம்

SAASAASAASAASAAASMSMSMSAASAASAASAASAASAASAASAAMMAMAMMMAMAAASAASAASAASAASAASAASAAAS

உள்ளது ; இது இன்னும் சோதனே மூலம் பிரித்துக் கண்டறியப் பெறவில்லை.

நேர்மின்னி (positron) : எதிர்மின்னியுடன் பிறந்த இரட்டைக் குழந்தை அளவிலும் எடையிலும் எதிர் மின்னியை பொத்தது. ஆளுல், நேர்மின்னூட்டம் பெற்றது. இதன் வாழ்நாள் மிகக் குறுகியது.

கேர் இயல் மின்னி (proton) ; எல்லா அணுக் கருக்களி லும் இயைபுப் பொருளாகவுள்ள அடிப்படையான துணுக்கு. அது ஒற்றை மின்னூட்டத்தைக் கொண்டது. ஒர் உட் கருவிலுள்ள நேர்இயல் மின்னிகளின் எண்ணிக்கை அதன் மின்னுரட்டத்தை நிர்ணயிக்கும் ; இதனுல் அதைச் சுற்றி லும் புறத்தேயுள்ள கோள்நில வட்டங்களிலுமுள்ள எதிர் மின்னிகளின் எண்ணிக்கையும் உறுதிப்படுகின்றது. வான வெளியிலுள்ள அண்டக் கதிர்கள் நேர் இயல் மின்னிகளா

6ᏇᏒᏉ6Ꮱféa 6☽ ↑ •

பக்குவிடல் (fission): ஒரு பொது இயல் மின்னியின் தாக்குதலால் பளுவான அணுவின் கருவொன்று பிளவுற்று பெருவேகத்துடன் பறந்து செல்லும் சில்லுகளாக (இவை: குறைந்தபொருண்மையையுடைய அணுக் கருக்கள்) தூக்கி யெறியப்படும். இதனுல் வெளிப்படும் ஆற்றல் சூடாக வெளி வருகிறது. சாதாரணமாக ஓர் உட்கருவிலிருந்து ஒன்றிலிருந்து மூன்றுவரை பொது இயல் மின்னிகள் பெருவேகத்துடன் வெளிப்பட்டு அண்மையிலுள்ள உட்கருக்களிலும் பக்குவிடு தலை நிகழ்த்தி தொடர்நிலை இயக்கம் நடைபெறச் செய்யும். ஒரு தனிமத்தின் பக்குவிடக் கூடிய அணுக்கள் பிளவுறும் அணுக்கள் என வழங்கப் பெறுகின்றன. பொது இயல் மின்னியின் வலுவான தாக்குதலால் பக்குவிடும் கிரியையில் வெளிப்படும் சில்லுகள் தீவிரமான கதிரியக்கத் தன்மை யைப் பெற்றிருக்கும். இது பக்குவிடும் கிரியையின் விளைவுப் பொருள் என்று வழங்கப்பெறும். இதில் பல்வேறு விதமான தனிமங்களும் ஓரிடத்தான்களும் அடங்கியிருக்கும்.

பிச்சுக்கட்டி (pitchblende) : யுரேனியம் அதிக அளவு கலந்துள்ள கணிப்பொருள். கரிய நிறமுள்ள ஆக்ஸைடு