பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு-2

325


இக்கனிப் பொருள் செக்கோசுலோவாக்கியா, பெல்ஜியன் காங்கோ, கானடா ஆகிய நாடுகளில் அதிகமாகக் கிடைக் கின்றது.

பிரீடர் அணு உலை(breeder reactor): ஓர் அணு உலை மின்னாற்றலை உற்பத்தி செய்யும்பொழுது தான் உட்கொள்ளும் அணு எரியையைவிட அதிகமான அணு எரியையை உற்பத்தி செய்வது. அது யுரேனியம்-238-ஐ பக்குவிடும் தன்மையுள்ள யுரேனியம்-235 ஆகவோ தோரியம் 232-ஐ பக்குவிடும் தன்மையுள்ள யுரேனியம்-233 ஆகவோ மாற்றக் கூடியது. அஃதாவது, அது பக்குவிடும் தன்மையற்ற தனிமங்களை எரியைகளாக மாற்றக் கூடியது.

பிளவுறல் (fission) : பக்குவிடல் பார்க்க.

பீட்டா-துணுக்கு (beta particle) : கதிரியக்கப் பொருள்கள் வெளிவிடும் கதிர்களில் ஒருவகை. அது எதிர் மின்னியை ஒத்திருக்கின்றது ; அது ஒற்றை எதிர் மின்னூட்டத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது அணுவின் உட்கருவிலிருந்து ஒளியின் வேகம் அளவுக்கு வெளியிடப்பெறுகின்றது. அது ஆல்பா-கதிர்களை விட அதிகமாகத் துளைத்துச் செல்லும் வன்மையையும், காமாகதிர்களைவிடக் குறைந்த துளைத்துச் செல்லும் வன்மையையும் கொண்டிருக்கிறது.

புதிர்க்கதிர்கள் (x-rays) : ஒரு வெற்றிடக் குழாயில் அதிக மின் அழுத்தத்திலும் அதிக வேகத்துடனும் எதிர் மின்னிகளை முன்னோக்கிச் செலுத்தி அவை டங்க்ஸ்டன் போன்ற உலோகத்தாலான இலக்கில் தாக்கச் செய்தால் உண்டாகும் கதிர்வீச்சுக்கள். அவை ஒளியைப்போல் அலை-அதிர்வுகளைக் கொண்டவை. அவற்றின் அலை-நீளம் கண்ணால் காணக்கூடிய ஒளியலை நீளத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு. புதிர்க்கதிர்களைக் கண்ணால் காணமுடியாது. ஆயினும், அவை பல அங்குல கனமுள்ள பொருளையும் துளைத்துச் செல்லக் கூடியவை; ஒளியைப்போல புகைப்படத் தகட்டையும் பாதிக்கக் கூடியவை. இவ்வாறு துளைத்-