பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அமைப்பு

21




லுள்ள பொருள்களெல்லாம் மின்சாரத்தால் ஆகியவை:என்பது இன்றைய அறிவியலறிஞர்கள் ஆய்ந்து கண்ட உண்மை அணுவினுள் குறைந்த அளவு நான்கு வகையான துணுக்குகளாவது இருக்கவேண்டும் என்பது உறுதி. எதிர் மின்னி, நேர் மின்னி36, நேர் இயல் மின்னி37 , பொது இயல் மின்னி38 என்பவை அவை. அணுவைச் சிதைக்கும் பொழுது இந்த நான்கு வகையான நுண்ணிய துணுக்குகள் வீசப்பெறுவதால், அணுவினுள் இவை நான்குமாவது அடங்கியிருக்கவேண்டும் என்பது உறுதியாக அறியப்படுவதொன்று. இவற்றைத் தவிர, எதிர் இயல் மின்னி,40 நியூட்டிரினோ41 என்ற துணுக்குகளும் உள்ளன. நேர்மின்னி என்பது எதிர் மின்னியுடன் பிறந்த இரட்டைக் குழந்தை. அளவிலும் எடையிலும் எதிர்மின்னியையொத்தது; ஆனால், நேர்மின்னூட்டம் பெற்றது. இதன் வாழ்நாள் மிகச் சிறியது. அணுவாற்றல் வெளிப்படுவதில் இது மிகச் சிறிய பங்கே கொண்டுள்ளது. எதிர் இயல் மின்னியைக் கண்டறிந்தவர் ஹிடேக்கி யூக்கோவா என்ற ஜப்பானிய நாட்டு பெளதிக நிபுணர்; 1935-ல் அவர் இதைக் கண்டறிந்தார். இதுவும் அற்பாயுலை உடையது ; இது எடுத்துக் கொள்ளும் பங்கு இன்னும் கண்டறியப் பெறவில்லை. நியூட்டிரினோ என்பது எதிர் மின்னியைப் போன்ற மிகச் சிறிய துணுக்கு. இதற்கு எடையும் இல்லை; மின்னூட்டமும் இல்லை. இது இன்னும் கொள்கையளவில் தான் உள்ளது; இது இன்னும் சோதனை மூலம் பிரித்துக் கண்டறியப் பெறவுமில்லை. இவை யாவும் அணுவின் கூறுகள். இவற்றைத் தவிர வேறு இரண்டு துணுக்குகள் அண்மையில் கண்டறியப் பெற்றுள்ளன. அவை கேமுயு-டு42, கேபை-டு43 என்பவை. இன்னும் அணுவின் உள்ளகத்தில் கிட்டத்தட்ட 21 விதத் துணுக்குகள் இருப்பதாக அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். அவற்றுள் பெரும்பாலானவை ஒரு நொடியின் மிகச் சிறு


33 எதிர்மின்னி - electron. 36 நேர்மின்னி - electron. 37 நேர் இயல் மின்னி-proton. 38பொது இயல் மின்னி-neutron.39 எதிர் இயல் மின்னி - meson. நியூட்டிரினே - nutrino.42கேமுயு-டூ- K mu-two. 43கெ பை-டூ- K pi-two.