பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

அணுவின் ஆக்கம்

தொடர்பு அது. அந்த எண்தான் அந்த அணுவின் கருவில் உள்ள நேர் இயல் மின்னியின் எண்ணிக்கை. அந்த அணுவில் கோள் நிலையில் சுற்றிவரும் எதிர் மின்னிகளின் எண்ணிக்கையையும் அந்த எண்ணே கட்டுகிறது. எனவே, அணு-எண்52 என்ற இந்த எண்ணை அணுவின் உண்மையையெல்லாம் விளக்கி நிற்கும் ஒரு மந்திரமாகவே கொள்ளவேண்டும்.

மேற்கூறியவற்றை நோக்கும்பொழுது, அணுவெல்லாம் அடிப்படையில் ஒரு தன்மையனவே என்பதை அறிகின்றோம். மின்னிகளின் ஏற்றக்குறைவே வேற்றுமைக்கு அடிப்படை. மின்னிகளின் எண்ணிக்கையை ஏற்றவும் குறைக்கவும் முடியுமானால், ஒருவகையணுவை வேறோருவகை அணுவாக்கலாம். செம்பையும் இரும்பையும் பொன்னாக்கலாம் ; இரசவாதம் செய்யலாம். இந்த எண்ணத்தை அணு-எண் நமக்குத் தருகின்றது. பண்டையோர் கருத்திலமைந்த இரசவாதமும் இந்த அடிப்படையில்தான் அமைந்திருக்க வேண்டும். இதனால் பொன்னும் மண்ணும்53 ஒன்றாகின்றன. இந்த உண்மையை நன்குணர்ந்த யோகியர் இரண்டையும் ஒன்றாகக் கருதும் உள்ளத்தினைப் பெற்றிருக்கின்றனர். இதனேயே,

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்54

என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டிருப்பதை எண்ணி மகிழலாம். அறிவியலறிஞர்கள் என்ற இன்றைய சித்தர்கள் அணு அமைப்பினை மாற்றிப் பொன்னைவிட மிக விலையுயர்ந்த பொருள்களை யாக்குவதை மேலே சென்று காண்போம்.

கோள்நிலை எதிர் மின்னிகள்: அணுவிலுள்ள எதிர் மின்னிகள் பல வட்டங்களில் சுழலுகின்றன என்று மேலே கூறினோம் அல்லவா? இந்த வட்டங்கள் வெவ்வேறு தூரங்-


52 அணு-எண்-atomic number. 53 மண்-silicon. 54 பெரிய புராணம் - செய்.143