பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆற்றல்

45


மேலே கூறிய மூன்று ஆற்றல்களைப்போல சாதாரண மனிதனுடைய அனுபவத்தில் அவ்வளவு அதிகமாக இந்த ஆற்றல் குறுக்கிடுவதில்லை. இதை மின் காந்தப் புலங்களினால் கம்பிச் சுருள்களின் இயக்கத்திற்கு ஏற்படும் தடை என்று கூறலாம்.

ஆற்றல் பரிமாற்றங்கள் :இவ்வாறு நாம் காணும் பல்வேறு ஆற்றல் வடிவங்கள் ஒன்று பிறிதொன்றாக மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்தப் பரிமாற்றத்தால்" நாம் பலவித செளகர்யங்களை அடைகின்றோம். மிக்க அமுக்கத்திலுள்ள நீராவியில் ஆற்றல் சூட்டு வடிவிலுள்ளது. அதன் பொருள் என்ன? நீராவியிலுள்ள நீரின் இறுதித் துணுக்குகளாகிய அணுத் திரளைகள் விரைவான இயக்கத்திலிருக்கின்றன. ஒரு பொறியினுள் அடங்கியிருக்கும் நீராவி ஓர் ஊடியங்கியைத் தள்ளிக் கொண்டு விரியுங்கால், அது குளிர்ந்து வெப்பத்தை இழக்கின்றது. இது அந்தப் பொறியில் இயந்திர ஆற்றலாக' மாறி விடுகிறது. அந்தப் பொறி ஒரு மின்னுக்கப் பொறி” யினை இயக்கி, எதிர் மின்னிகளே இயக்க நிலைக்குக் கொண்டு வருகின்றது. இதனால் மின்னோட்ட வடிவில் மின்சார ஆற்றல் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றல் ஓர் இயந்திர இயக்கியை' (மோட்டார்) இயக்கி மீண்டும் இயந்திர ஆற்றலாக மாறி விடுகிறது. அல்லது, அந்த மின்னாற்றல் ஒரு கம்பியின் வழியாகச் சென்று வெப்ப ஆற்றலாக மாறவும் கூடும். மின் அடுப்புக்கள் யாவும் இந்த மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுவதன் விளைவாக ஏற்பட்டவையே. அதே கம்பி மிக உயர்ந்த அளவில் சூடானுல் அது ஒளிர்வடைந்து அந்த ஆற்றலில் ஒருபகுதி ஒளியாற்றலாக வீசப்பெறுகின்றது. எல்லா ஆற்றல்களிலும் ஒளியாற்றல்தான் மிகத் தூய்மையானது. காரணம், அது


  • பரிமாற்றம் - transformation. “ இயக்கம்- motion. * ஊடியாங்கி- piston. ” இயந்திர ஆற்றல்- mechanical energy. ** மின்னாக்க பொறி- dynamo. ” மின்னோட்டம் - electric current. * இயந்திர இயக்கி - motor. * ஒளிர்வு அடைதல் - becomes luminous