பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அணுவின் ஆக்கம்


(கரியமிலவாயுவும் நீரும்) ஆற்றலின் அளவு அவற்றின் அசல் பொருள்களிலிருக்கும் ஆற்றலைவிடக் குறைவானது என்பதை அறிந்து கொள்ளுகின்றோம். இதையே இன்னொரு விதமாக மாற்றிக் கூறலாம். எரியக்கூடிய40 பொருள்களும் உயிரியமும் தனித்தனியே கொண்டுள்ள ஆற்றல் அவை எரிதல் அல்லது ஆக்ஸிகரணம் என்ற வேதியல் எதிர்வினை என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டபிறகு, அஃதாவது கரியமில வாயுவாகவும் நீராகவும் மாற்றம் அடைந்த பிறகு, கொண்டுள்ள ஆற்றலைவிட அதிகமாகவுள்ளது.

எரியும் பொருள்களின் அணுத்திரளைகளிலுள்ள அணுக்களே ஒன்று சேர்த்து வைக்கும் கொக்கிகளிடமிருந்தே இந்த ஆற்றல் வெளிப்படுகின்றது. உண்மையில் இந்தக் கொக்கிகள் என்பவை, கதிரவனைச் சுற்றிவரும் கோள்களைப் போலவே அணுக்களின் மேற்பரப்பிலுள்ள அயனப்பாதை41களில் சுற்றிக் கொண்டிருக்கும் எதிர் மின்னிகளே. எரிதலுக்கும் உயிர்வாழ்வதற்கும் தேவையான ஆற்றல் இந்த எதிர்மின்னிகளிடமிருந்தே கிடைக்கின்றன. ஓர் எடுத்துக்காட்டால் இதனை விளக்குவோம். கரி எரிகிறது; என்ன ஆகிறது? கரி என்ற அணுத்திரளைகள் பிரிந்து காற்றிலுள்ள உயிரியத் திரளேகளுடன் சேர்ந்து எரிந்து கரியமிலவாயு என்ற கரி-ஈர் உயிரியமாகின்றன. இம்மாற்றத்தை வேதியற் புலவர்கள்,

C + O2-->-CO2

என்று எழுதிக் காட்டுவர். அம்பு போகும் வழிதான் மாற்றம் செல்லும் வழியாகும். கரியின் குறியீடு, C , உயிரியத்தின் குறியீடு, O கரியணுத்திரளையில் ஒவ்வொரு கரியணுவே அணுத்திரளையாக இருப்பதுண்டு. உயிரிய அணுத்திரளேயில் உயிரிய அணு இரட்டை இரட்டையாக இருக்கும். இதனை C-O, என்று குறிப்பிடலாம். இந்த


41 எரியக்கூடிய- combustible. 41 அயனப்பாதை, அயனவீதி - orbit