பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றல்

53


இரண்டும் என்ன ஆகின்றன என்பதன இடையே அம்புக் குறியிட்டு C-C-CO, (கரியமிலவாயு) என்று எழுதிக் காட்டுவர். இடப்புறம் உள்ள இரண்டுவகை அணுத்திரளைகள் சேர்க்கைப்பொருளாகும்பொழுது ஒரேவித அணுத்திரளைகளாக மாறுகின்றன. அதனால்தான் அங்குச் சூடு பிறக்கின்றது. இந்தச் சூடு எங்கிருந்து வருகிறது? சட்டியிலிருப்பதுதானே அகப்பையில் வரும்? ஆதலின், இச் சூடு ஆற்றல் கரியில் முன்னரே நம் கண்ணிற்குப் புலப்படாமல் அமைந்து உறைந்து கிடந்திருக்க வேண்டும். எனவே, கரி என்பதன (கரி+சூடு) என்று சொல்லவேண்டும். அப் பொழுதுதான் வேதிமாற்றத்தில்,

(C+சூடு)+02--C02+சூடு

என்று இரண்டு புறமும் ஒத்திருப்பதைக் காட்டலாம். கார்பன் அணுவின் வெளி அயன வீதியிலுள்ள எதிர்மின்னிகள், உயிரிய அணுவின் வெளி அய்னவீதியிலுள்ள எதிர் மின்னிகளைத் தாக்கும்பொழுது இரண்டு அயனவீதிகளும் ஒன்று சேர்ந்து எளிய, நிலேத்த அயனவீதிகளை உண்டாக்கி விடுகின்றன. இவ்வீதிகள் சிதையாதிருப்பதற்குக் குறைந்த ஆற்றல்தான் தேவை. தேவையில்லாது, அதிகப்படியாகவுள்ள ஆற்றல், சேமிப்பிலிருந்து தப்பி வெளியேறி பயனுள்ள ஆற்றலாக, அஃதாவது வினையாற்றவல்ல சூடாக, வெளிப்படுகின்றது.

அணு ஆற்றல் : எரியைகளிலும் உணவு வகைகளிலு மிருந்து பெறும் ஆற்றல் அணுக்களின் திரட்சியிலிருந்து வெளிவந்ததாகும். உயிர்ப் பொருள்களின் அணுக்கோவை பல தொடர்களாக இருக்கிறது என்று கண்டோமல்லவா? ஒவ்வொரு தொடரிலும் அணுவோடு அணு பல கொக்கிகளாக மாட்டிக்கொண்டு கிடப்பதுபோல் காணப்படுகின்றது. இந்தப் பிணேப்புக்கள் அறுபடுங்கால் ஆற்றல் வெளிப்படுகின்றது. அதனுல்தான் உடல் சூடாகவும் இருக்கிறது; இயங்கியும் வருகின்றது. கட்டையிலும், கரியிலும் இதே நிலைதான். அவை எரிந்தால் சூடு, ஒளி, புகை,-